என்ன? என்ன? என் எண்ண மென்ன?
கண்கள் சொல்லும் கவிதையென்ன? – அவை
உன்முகம் காணத் தவிப்பதென்ன?
கைகள் செய்யும் வேலையென்ன? – அவை
அருள்நாடும்
தொண்டகளானதென்ன ?
காலகள் நடக்கும் துாரமென்ன? – அவை
வையத்தில் உன்புகழாய் நிலைப்பதென்ன?
மனம் எண்ணம் எண்ணமென்ன? – அவை உனை
எண்ண எண்ண இனிப்பதென்ன?
இனித்த மனம் கொண்ட குருநாதனே!
தனித்த தவம் புரியும் மேலோனே!
உன் திருவடிக் கருணையென்ன..?
கனியாக்கி, கனிந்தபின் கழற்றியருள்வாய்!
-சக்தி. விரிவுரையாளர்,
ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி
சக்தி ஒளி ஏப்பரல் 2009 பக்கம் (32)
]]>