பாகம் -6
போற்றித் திருவுருவின் 10-வது “ஓம் மனமாக துடைப்பாய் போற்றி ஓம்” என்ற மந்திரமாகும். மனிதர் களின் மனத்தில் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும் மாசாகிய குற்றங்களைக் துடைத்துப் போக்குகின்றாள் அன்னை என்பதே இதன் பொருள் ஆகும். மனித மனம் வித்தையதனது! மனிதன் நினைககும் எண்ணங்கள் அனைத்தும் மனத்தில் தான் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் தான் பின்னர் செயலாக மாறுகின்றன. மனித மனத்தில் தோன்றும் எல்லா எண்ணங்களும் செயலாகப் பரிணமிப்பதில்லை. பரிணமிக்கவும் முடியாது. இவ்வாறு இருப்பதால் நாம் ஒரு தவறு செய்யவும் ஏதுவாகிறது. செயலாக வெளிப்பட முடியாத எண்ணங்கட்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. காரணம் அந்த எண்ணங்களைப் பிறர் அறிய முடியாதகையால் அதனால் ஒன்றும் பயன் விளையாது என்று நினைக்கிறோம். இது தவறாகும்.
மனத்தில் தோன்றும் எண்ணங்கள் இரு வகைப்படும். ஒரு வகை நல்ல எண்ணங்கள் என்ற பெயரைப் பெறும். பிறரிடம் இரக்கம், அன்பு, உபகாரம் முதலியவை காட்ட வேண்டும் என்ற முறையில் தோன்றும்; எண்ணங்கள் நல்லவை என்ற நெருப்பினுள் அடங்கும். இவை செயலாகப் பரிணமிக்கும் பொழுது உலகத்தார் இதனைப் பாராட்டுகின்றனர். பிறர் பாராட்டுகிறார்கள் என்பதால் உண்மையில் இல்லாவிட்டாலும் நம்மில் பலர் இத்தகைய நல்ல எண்ணங்கள்; நம்மிடம் இருப்பது போலக் காட்டிக்கொள்கிறோம். நம் எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் கருவியாக நம் பேச்சு அமந்து இருத்தலின் பலரும் அன்பு, தயை முதலியன மனத்தில் இருப்பது போல நம்பேச்சில் காட்டிக்கொள்கின்றனர். நம்முடைய பேச்சு பெரும்பாலும் நம் எண்ணத்தைப் பிரதிபலிப்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் எண்ணத்தில் இல்லாததையும் பேச்சில் வெளிபபடுத்த்டுத்த முடியும். எண்ணத்திற்கு நேர்மாறான வற்றையும் பேச்சில் வெளிப்படுத்த முடியும். அன்பு, தயை கடுகளவு இல்லாதவர்கள் கூட இவை தம்மிடம் இருப்பது போலப் பேச முடியும். எனவே ஒருவருடைய பேச்சு அவருடைய உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. என்று உறுதியாகக் கூற முடியும்.
எனவே, மனிதனுடைய மனத்தில் தோன்றும் எண்ணங்கள் எத்தகைய சக்தி வாய்ந்தவை என்பதை அறிய வேண்டும். அந்த எண்ணம் செயலாக வெளிப்படாவிட்டால் அது எத்தகைய எண்ணமாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என நம்மில் பலர் கருதுகிறோம். இது தவறு. வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் வலுவானவை. அவற்றிற்கு ஆற்றல் உண்டு. ஒருவருடைய மனத்தில் தோன்றும் எண்ணங்கள் அவரை உயர்த்துவனவாகவோ, தாழ்ந்தவனாகவே ஆக்குகின்றன. இதைக் கருத்தித்தான் திருவள்ளுவர்
“மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்;” என்றும்
“உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்” என்றும் கூறிப் போனார்.
இனி மனத்தில் தோன்றும் இரண்டாவது வகை எண்ணங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இவை தீமையானவை பெரும்பாலும் சாதாரண மனிதனுடைய மனத்தில் இவ் வெண்ணங்கள் குடிகொண்டு இருக்கும். இந்தத்தீய எண்ணங்னளை ஆறு வகையாக நம் முன்னோர்கள் பிரித்து அவற்றிற்குத் தனித்தனியே பெயரும் இட்டுள்ளனர். காமம், குரோதம், கோபம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற பெயர்களால் இத்தீய எண்ணங்களைக் குறித்தனர். இவை அனைத்தும் மனத்தில் தோன்றும் குற்றங்கள் (மாசுகள்) எனப்பெறும். ஒவ்வொரு பெயர் கொடுக்கப் பெற்றாலும் காமம் முதலிய இப்பெரிய தலைப்பினுள் பலப்பல கிளைகள் அடங்கும். ஆசையை மோகம் என்றும் பெண்கள் மேல் வைக்கப் பெறும் தவறான ஆசையைக் காமம் என்றும் கூறுவர்.
மனத்தில் இக்குற்றங்கள் எண்ண வடிவில் தோன்றி அவை வெளிப்படாமல் இருந்தால் இதனால் யாருக்கும் என்ன நட்டம் ஏன் இவை பற்றிக் கவலைப்பட வேண்டும்? இத் தவறான எண்ணங்கள் வெளிப்hட்டுச் செயலாக பரிணமிக்காத வரை சமுதாயத்திற்கு இவர்களால் தீங்கு ஒன்றும் இல் என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஆனாலும் ஆழ்ந்த நோக்கினால் வெளிப்படாவிடினும் இக்குற்றங்கள் சமுதாயத்தை ஓரளவு தாக்கத்தான் செய்கின்றன. காரணம் இத்தீய எண்ணங்கள் அலைகளாளப் பரிணமித்துச் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களைத் தாக்கத்தான் செய்கின்றது.
இத்தகைய தவறான எண்ணம் உடையவர்கள் பலர் கூடினால் அதன் பயனாக எழும் தீய அலைகள் சுற்று வட்டாரத்தை; தாக்கத்தான் செய்யும். இன்று விஞ்ஞான மனத்துவ ரீதியாக இதனை நிரூபித்து உள்ளனர். அதனால்தான் நல்லவர்கள் கூட்டத் தில் நாம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
எத்தகைய உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்கட்கும் பொறி, புலன் வழி நடக்கின்ற மனம் காமக் குரோதம் முதலிய குற்ற நினைவுகளை ஓரளவுக்குப் பொருத்தித்தான் இருக்கும். பொறி, புலன்கள், செயற்படாமல் இருப்பது இயலாத காரியம். அப்படி ஒரேவழி அவைகள் அடங்கினால் கூட அவற்றின் வாசனையுடன் வளர்ந்துவிட்டமனம் இக்குற்றங்களிலிருந்து நீங்கித் தூய்மையாக இருத்தல் கடினத்திலும் கடினமாகும். அப்படியானால் மனத்தில் இயல்பாகவே தோன்றும் இந்தக் குற்றங்களை (மாசுகள்) எவ்வாறு ஒருவன் போக்கமுடியும்? அறிவு, கல்வி, நல்லார் கூட்டுறவு என்பவற்றின் துணை கொண்டு ஓரளவு இந்தக் குற்றங்களைப் போக்க ஒருவன் முயலலாம். ஆனால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவன் முழுவதும் வெற்றி கொண்டுவிட முடியாது. இதனை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்து இதற்கு ஒரு வழியையும் கண்டு பிடித்தனர். சாதாரண உலகியலில் நம்மால் ஒரு காரியத்தைச் செய்ய முடியாத பொழுது அதனைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்களை உதவிக்கு அழைத்துக் கொள்கிறோம் அல்லவா?
அதேபோல இந்த மனமாசுகளை நாமே அகற்ற முடியாத பொழுது இவற்றை அகற்றக் கூடிய ஆற்றல் பெற்ற அன்னை ஆதிபராசக்தியின் அருளை நாடுவதுதான் வழி. நாம் உதவிக்கு யாரை அழைக்கிறோம்? நாம் செய்ய முடியாதவற்றை எளிதாகச் செய்யக் கூடியவர்களைத் தானே அழைக்கி றோம்? அதே போல காமம் முதலிய குற்றங்களை உடைய ஒருவனை நாடிப் பயன் இல்லை அல்லவா? எனவே அன்னை இக் குற்றங்களைப் போக்கும் ஆற்றல் உள்ளவன் ஆதலால் அவன் அருளை நாடுகிறோம். அதைத்தான் இந்த மந்திரம் சுருக்கமாகக் கூறுகிறது. ஆனால் லலிதா சகஸ்ரம் ஆயிர மந்திரங்களைப் பெற்றுத்திகழ்தலின் இந்தக் குற்றங்களைத் தனித்தனியே எடுத்து விரிவாகக் கூறுவது.
ஓம் சக்தி நன்றி: சக்தி ஒளி விளக்கு :2 சுடர் :1 பக்கம் : 26-28
]]>