காப்பு – விநாயகர் துதி பூதலத்தோர் போற்றும் புன்தமரு வத்தூர்வாழ் ஆதிபரா சக்தி அடியினைக்குக் – கோதில் கலிவெண்பா பாடற்குக் காப்பாகும் காரார் கலிகடியும் ஆனைமுகன் காண நூல் செங்கமலப் பூத்தேளும் செந்திருவின் நாயகனும் திங்கள் அணிந்தச்சடைச் செய்யோனும் – தங்கன் மனத்தூய்மை யோடு வந்திக்கும் தேவி கனத்திருள் போலுள்ள கண்மம் – அனைத்தும முறுங் கண்ணுல் அகற்றிடும் ஆத்தாள் தனத்தியல்பால் அன்பர்தம் தாவா – மனத்தகத்தன் மேவும் பராசக்தி மேல்மருவத் தூர்வாழும் தேவுகளின் தாயானவள்; தேர்ந்தஞானம் – யாவும் வேண்டுவார்க் கீயும் விமலை; அருள் உருவம் பூண்டு பிறர்குறைகள் போகச்செய் – மாண்புடையாள்; மிக்கபிழை செய்தாரும் மேவின அவர் தம்மைத் தக்க வகையுயர்த்தும் தன்மையாள் – தொக்க அடியார் பலரும் அடி தொழுவான் வேண்டிப் படியின் தவங்கிடப்பர் பண்பால் – முடிவில்லை ஆனந்தம் ஆங்குவார்; அன்னை திருவடிவை மானக்கருத்தில் மகிழ்த்திருத்தி – மோனக் குறியுணர்ந்து கொண்டு குறையின்றி வாழ்வார்; பிறிதொரு தெய்வம் போணார் – செறிவேப்பின் கற்றருவின் நாயகிநாடும் அதன் இலையால் துற்றபெரு நோய்தீர்க்கும் தூய்மையாள் -கற்ற புலவர்களும் கல்லார் புகலில்லார் யார்ம் பலசமய வேறுபா டின்றிப் – பலவிதமாய்ப் போற்றும் கலமிங்கே போதப் பொதியுமிது. போற்பிற பீடத்தில் போற்றுவதில் – முற்றப் புதுமையிது; ஈடில்லாப் பொறபின் பெருமை; சதுர்மறைகள் கூறும்விதி சாரா – தெதிசில் தமிழ் மொழியில் எல்லாம் தனிப்புசை செய்ய அமிழ்தென்னக் கேட்போர் அகத்தில் – கமித்தகல் பக்தி வளரும், பாஞானம் மேல்வளரும், சித்தம் மிகத்தூய்மைச் செம்மையுறும். – நித்தநித்தம் அன்பு வயத்தால் அடிவணங்கும் ஆற்றலுரும் இன்ப நெறியாக்கும் ஈடில்முறை – முன்பெங்கும் கேட்டதிலை கண்டதிலே கேடில்லாச் சீர்த்திமுறை காட்டிலுன சாதிசமயமெனும் – கோட்டமிலை; இத்தலத்தில் சித்தர்கள் ஏற்றவிடத் தேவாழ்வர் அத்தகையோர் ஆதரத்தால் அம்பிகையால் – தந்தித் கரந்துரைவர்; ஆங்கவரைக் கண்டால் அரிதாம்; பரவியுறும் சித்தர்களுள் பண்பால் – நிறைந்த ஒரு பெற்றித் திருச்சித்தர் போருளால் மானிடராய் மற்றிப்பங் காரடிக ளாய்வந்தார் – மற்ற வர்பால் அம்பிகைதான் மேவி அவர்வாயால் அருள்வாக்கை நம்பிவரு வோர்க்கு நவில்கின்றான் – தம்பரிவாழ் சின்முத் திரைகாட்டிச் செம்பொருளின் சீர்காட்டிப் பண்முகத்தால் மக்கள் பணிபுரியச் – சொன்னமுறையால் நன்மை பெறச் செய்வான்; நல்ல முறை ஈதாகும் பன்னும் செயலிதனைப் பார்த்திடனே – அன்னியமில் நெஞ்சத்த ராவர் நினைத்தவை கைகூட விஞ்சு நலம்பெறுவர் வீவில் லாத் – தஞ்சம் புகுவர், எனின் இதன் பெற்ற களைப் கூறத் தகுமா யிரநாக்குத் தானில் – அகிலாண்ட நாயகியின் ஆர்க்கத்திரு நல்வடிவைக் காண்டற்குத் தூயகன் ஆயிரமும் தோன்றிலவால் – மேய மருவத்தூர் நீர்வளமும் மண்வளமும் ஞானத் திருவளமும் பெற்றுத் திகழும் – உருவின்றித் தானே சுயம்பாய்த் தக்கவிதத் தம்பிகைதான் வானே வணங்குவதற்று வந்தாகாண் – தேனுவும் கற்ப தருவம் கருதுசிந் தாமணியும் அற்ப மெருவருனை அன்பருற – முற்பட்டு முன்னுங் கருணையினால் முன்னனிக்கும் தேவி, புகழ் துன்னும் கவுமாரி, தோற்றமிலா – இன்பதரு, வாய்ந்த திருசூலி, வாராலி, உயிர்களுக்குள் நோய்ந்த அபிராமி, தொன்மறைகள் – எய்ந்தவிதிக் கப்பாலாய் ஆகமங்கட் கப்பாலாய் நின்றவன் தான் தப்பா துலகிற்கத் தாயாகிய – எப்பொருளும் ஆனால், திருமாலின் அருந்தங்கை யாய்ப்பரமன் மானார் கரத்தன் மதிக்கவே – கோனாத வல்விடத்தைக் கண்டமட்டில் வாழும் வகைதடுத்தான் நல்லருளைத் தந்தவளை நம்பினாள் – மல்லேற்றான் என்னும் படிபுரிந்தால், ஈடில்லாப் பெண்தெய்வம் பன்னுகின்ற கங்கையினைப் பத்துவிரல் – நன்னீரால் தோற்றுவித்த காரணியே, சொல்கடந்த வித்தகியே மாற்றரியா மேனி மரகதமே – போற்றுமலர் எந்த இடரையும் ஏற்கா தழிழ்த்துலக பந்தனை யில்லாப் பரசிவையே – தொந்தமுதறும் மாளாப் பிறவி மயக்கருப்பாய், மண்ணனைத்தும் கோளார்ந்த விண்ணனைத்தும் கோளனைத்தும் – கேளாதும் ஒலியனைத்தும் மண்ணனைத்தும் ஓவா வலியாம் வலியனைத்தும் தீயனைத்தும் வாழ்ந்த – மெலிவின்றி நின்னாற்றல் இன்றேல் நிலத்தில் வினைசெய்யா என்றால் உனதாற்றல் எத்தகைய – தென்று இயம்புவதற் கார்உரியர் ஏற்றமிகும் ஈசன் மயலின்றி ஐந்தொழிலை மாண – உயலின்றிக் செய்வதுதான் உன்னாணை செங்கமலப் பாதத்தாய் உய்யும் வழிகாட்டும் உத்தம் – மெய்மைத் துரியங் கடந்த சுகுமாரி வேலன்முன் ஒருமமா முதலை யொழிக்கப் – பெருஞ்சக்தி வேலினைத் தந்த விமலைநீ உன்றன்கல் சேலினை யொத்த திருக்கண் – மாலினைப் போக்கு வருவாய் புனிதத் திருவடி காக்கும் உனக்குக் கவலையிலை – சீக்கும் புலன்கள் அறிவினைப் பொன்றிடச் செய்யா மலமார் பிறவி மயக்கம் – திளமலவும் இல்லை யெனச்செயுநின் ஈடி லடிபோற்றி தொல்லை வினையைத் துரத்துவாய் – சொல்லார்ந்த ஆறாதா ரத்துள்ள அருள்போற்றி எவ்வெவாக்கும் மாறாத் துணையாய் மாதாவாய்த் – சீறும் கவலை யொலிக்கும் கமலமுகம் போற்றி, உவர்ந்துயிர்க்குள் நின்ற ஒளியே – தவமுனிவர் போற்றும் தாயாபரி போற்றி, சராசரங்கள் தோற்றம் வகைசெய்யும் தூயவனே – போற்றி கலைஞானம் ஈயம் காரணி போற்றி மலை மகளாம் பார்வதி மாதே – நிலையாய்ச் சித்தனைத் செய்யும்சீர்ச் சிற்பரையே போற்றி பத்திர காளி பயிரவி – நித்தியமாய் ஆதியும் அந்தமும் இல்லாய் அடிபோற்றி சோதிச் சுயம்புவாய்த் தோன்றினாய் – தீமைகள் தீர்க்கும் திரிசூலம் சேர்சுரத்தாய் போற்றியுன் கார்குழல் போற்றி கவின் பெறும் – நார்மலர் வாசத் தருஆமனி வழிவழி போற்றி நீள் பாசமொ டங்குச் பாணியே – நேசமிகும் கல்யாணி போற்றி கலைமகளும் செந்திருவும் சொல்லார்ந்த கண்ணாய் துலங்கிடுவாய் – எல்லிடும் வாமக் கரம் போற்றி மன்பதைகள் வாழ்வுபெறச் சேமவர தாபயக்கைச் சீர்போற்றி – ஏமமுறும் கோலத் திருமேனி கொண்டாய் குணம் போற்றி நீலவடி வாகிய நின்மலி – வாலப் பகவதி, காரணி, பார்க்கவி, பூரத் தகம்வியக்கும் அற்புதங்கள் ஆற்றும் – மகமாரி சாம்பவி சங்கரி சாமளை மரிதங்கி ஆம்பால் மலர்வாயன் ஈரணி – தேம்களின் நாயகி வாரணி கம்பனிடப் பால்மேவி ஆயபுக ழீந்த அபிராமி – தூய தயாபரி என்றென்று தாழ்ந்து வணங்கின் கியாதி வரச்செய்வாள் கிளரா – வயோதிகம் வந்தாலும் வ ன்மை வளமிக்க நல்லுடலும் தந்தா தரிப்பாள் தயங்காமல் – வக்தீர்ப்பீர் இக்குக் கரத்தவன் என்றென்றும் பு+சிக்கும் மக்களை வாழவைக்கும் மாண்புடையாள் – தொக்குவரும் பத்தர் மிகவாழி பரமேச் வரி வாழி நித்தம் அருள் வாழி தேர்ந்து ஓம் சக்தி நன்றி: சக்தி ஒளி விளக்கு :2 சுடர் :1 பக்கம் : 22-25]]>