” ஒரு தாய் தன் குழந்தைக்கு எப்படிப் பால் கொடுக்கிறாள்? குழந்தையின் தலையை வருடகொடுத்து அதன் கால்களை வருடிகொடுத்துச் சூழ்நிலையை மறந்து இன்முகத்தோடு பால் ஊட்டுகிறாள். அந்தக் குழந்தையன்பில் தன்னை மறக்கிறாள். குழந்தையும், தன்னை மறந்து தாயின் மடியை எட்டி எட்டி உதைத்தபடி, தாயின் காதுகளை வருடியவடி மகிழ்வோடு பாலை அருந்துகிறது. இந்த நிலையும் ஒரு வகையில் தியான நிலை தான். இந்த நிலையில் தாய்க்கும் பால் சுரக்கிறது. குழந்தையும் பாலைச் சந்தோஷத்துடன் குடிக்கிறது. இந்த இருபால் அன்புணர்வே ஆன்மிகத்தின் அடிப்படை. எவ்வாறு ஆன்மிகம் ஊட்டுகிறேன்? “”கோழி தன் குஞ்சுகளின் ஜீரணசக்தியறிந்து உணவூட்டுவது போல நானும் இங்கே நீங்கள் ஏற்றக் கொள்ளத்தக்க அளவறிந்தே ஆன்மிகத்தை ஊட்டிவருகிறேன்””. “
]]>