பிழை செய்தலும் மன்னித்தலும்

“பிழை செய்வது மானிட இயல்பு; மன்னித்தல் தெய்வீக இயல்பு” என்று ஆங்கிலக் கவிஞா அலக்சண்டர் வேசப் கூறினார். வேற்று மொழியில் கூறப் பெற்றாலும் உலகம் முழுவதற்கும் முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்தாகும் இது. பிழை செய்தல் என்பது மானிட உயிர்கள் விரும்பியோ விரும்பாமலோ அன்றாடச் செய்யும் செயலாகும். ஆனால் இங்கே மன்னித்தல் என்று கூறும் பொழுது கடவுள் நம்மை மன்னிப்பதைப் பற்றிக் கூறவில்லை. இங்குக் கூற எடுத்துக் கொண்டது நமக்குப் பிழை செய்தவர்களை நாம் மன்னிப்பது குறித்தேயாகும்.

நமக்குப் பிழை அல்லது தீமைகளை யார் செய்கிறார்கள்? நம்மிடம் அன்பு செலுத்தும் நண்பர்கள், தம்மை வெறுக்கும் பகைவர்கள் ஆகிய இரு சாராரும் தீமை செய்கின்றனர். நண்பர்கள் கூடப் பிழை செய்வார்களா என்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம்! அறியாமை காரணமாகவும், அன்பின் மிகுதி காரணமாகவும் பிழை செய்யலாம் அல்லவா? எடல்நலம் குறைவால் நாம் உண்ணக்கூடாது, குறிப்பிட்ட பொருளைக் குடிக்கக் கூடாது என்று இருக்கும் பொழுது நம்மை உவத்திரவம் செய்து உண்ணவும் குடிக்கவும் செய்யும் நண்பர்கள் உண்மையில் தீமைதான் புரிகின்றனர். இவை எளிதில் மன்னிக்கக%

]]>