நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகள் வைத்து வழிபட வேண்டும்.
1. முதல் படியில் ஒரறிவு உயிர்ப்பொருள்களை உணர்த்தும் பொம்மைகள் இருத்தல் வேண்டும். புல், செடி , கொடி, தாவரம் என்பன ஒரறிவு உயிர்கள்.
2. இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட உயிர்ப்பொருளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும். நத்தை, சங்கு என்பன ஈரறிவு உயிர்கள். 3. மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் பொம்மைகள் இடம்பெற வேண்டும். செல், எறும்பு என்பன மூன்றறிவு உயிர்கள்.
4. நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் பொம்மைகள் இடம்பெற வேண்டும். நண்டு, வண்டு என்பன நான்கு அறிவு உயிர்கள்.
5. ஜந்தாவது படியில் ஜயறிவு கொண்ட உயிர்களை விளக்கும் பொம்மைகள் இடம்பெற வேண்டும். நாற்கால் விலங்குகள் , பறவைகள் முதலியவை ஜந்தறிவு கொண்டவை.
6. ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.
7. ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிக்ஷிகளின் பொம்மைகள் இடம்பெற் வேண்டும்.
8. எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்குப் பாலகர்கள் என்பன இருக்கலாம்.
9. ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள், அவர் தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ஆகியோர் இருக்க வேண்டும்.
– ஆதிபராசக்தி நடுநாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று, கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை இப் படிகளும், பொம்மைகள் காட்டுகின்றன..
நவராத்திரி கொலுவைப் பராசக்தியின் “விஸ்வரூப தரிசனம்” என்று கூறலாம். ” எல்லாமாக இருப்பவள் நானே” என்பதைப் பராசக்தி அந்தக் கொலு பொம்மைகள் வாயிலாக உணர்த்துகிறாள்.
நவராத்திரி கொலுவின் தத்துவம் இதுவே! ஓம் சக்தி
நன்றி சக்தி ஒளி 1996 செப்டம்பர் பக்கம் 7-8.
]]>