இறையுணர்வு: அன்னையின் அருட்படைப் பால் அலைந்திருக்கும் இந்த அகிலத்தில் வாழும் நமக்கு, இறையுணர்வு தேவைதானா? என்ற கேள்வி ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழாமல் இல்லை. உடல் இயங்குவதற்கு எப்படிச் சக்தி தேவைப்படுகிறதோ? அவ்வாறே உள்ளம் இயங்கவும் சக்தி தேவைப்படுகிறது என்பது உண்மை. உடலுக்கு வேண்டிய சக்தியினை நல்ல சத்துள்ள உணவு, சுகாதார முறைப்படியான, இருப்பிடம் மருத்துவம் மற்றும் சுற்றுபுறச் சூழ்நிலை முதலியவற்றால் அடைய முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்துவரும் இந்நாளில் உள்ளத்தை நல்ல முறையில் இயக்க, மனஅமைதி பெற தூய உணர்வு பெற, எந்தவித விஞ்ஞான முயற்சியும் பயனளித்ததாகக் கொள்ள முடியவில்லை. இறுதியாக உள்ளத்தை இயக்கக்கூடிய தூய்மையான சக்தியை, வலிமையை இறையுணர்வு ஒன்றுதான் அளிக்கக்கூடியது என்பது அறிஞர் பெருமக்கள் கண்டுணர்த்த உண்மையாகும்.

ஊழ் வினை: விஞ்ஞான உலகின் மனிதனு டைய தேவைகள் வளர வளர மனிதன் தனது தேவைக்குரியனவற்றை அடை வதற்காகக் கையாளும் வழிமுறைகளுள், மாறி மாறி வருவது இயல்பு. மாறிவரும் வழிமுறைகளில் தவறான நடைமுறைகள் ஊடுருவுவதும் இயல்பு. அவ்வாறு ஊடுறுவதும் தவறான நடைமுறைகளாலும், மேற்கொள்ளும் சிறிய நல்வழிகளாலும் விளைவதே ஊழ்வினை. ஊழ்வினையினை ‘‘நல்வினை” ‘‘தீவினை” என இரண்டாகக் கொள்ளலாம். ஊழ் வினையினை முன்வினை என்ற பெயரால் அழைப்பது வழக்கம். அதனை வடமொழியில் ‘‘பிராப்த்தம்” ‘‘ஆகாமியம்” ‘‘சஞ்சிதம்” என மூன்றாக்குவர்.

முன்வினையினைத் தெய்வ அருளால் மாற்றிக் கொள்ளவும் முடியும். ஆனால் ஞானிகள் அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்புவது இல்லை. அதை அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடிப்பவர்கள். இதனால்தான் திருமந்திரம் ‘‘முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பவர், பின்னை வினையைப் பிசைந்து எறிவர். தம்மை உணர்ந்த தத்துவஞானிகள், என்று கூறுகிறது. அருள் வயப்பட்ட சான்றோர்கள் தன் ஊழ்வினையைத் தணிந்துக்கொள்ள விரும்பாமற் பிறருடைய ஊழ்வினையைத் தாமே முன்னின்று தணிக்க முயலும் செயலை அருள் நோக்கில் செய்து வருகிறார்கள். அதனால் வரும் துன்பத்தைக்கூடப் பிறருக்காகத் தாமே ஏற்றுக்கொள்ளும் தனக்குவமை இல்லாத தன்மையுடையவர்கள் அவர்கள்.

நாட்டின் நிலை: தம்முடைய வாழ்க்கை முறையும், செயல்களும், செல்வ நிலையும், பண்பாடும், முன் கூறப்பட்ட முன்வினைக்கேற்ப அமைவதே இயற்கை என்பது முன்னோர் கண்ட முடிவு. மேலும் விஞ்ஞானம் வளர்ந்து வரும் இந்நாளில் தன்னுடைய வாழ்க்கை முன்னேற பொருளீட்டவும் பகட்டான வாழ்வு மேற்கொள்ளவும், தன்னிலையினை உயர்த்திக் கொள்ளவும், கையாளும் நடைமுறைகளில் அடுத்தவர்களை அழித்தும், அடக்கியும், மற்ற நிலைகளைத் தன்வயப்படுத்திக் கொள்வது இயல்பாக அமைந்து விடுகிறது. அவ்வாறு அமையும் செயல் முறைக ளால் மனம் அன்பு செலுத்துவதிலிருந்தும் பிறரை அரவணைத்து நடத்துவதிலிருந்தும், உண்மையான நிலைகளிலிருந்தும் விலகி எதிர்வழியில் செல்ல வேண்டியுள்ளது. ஆணவமும், பேரவாவும், அலட்சிய போக்கும் மனத்தை ஆட்கொண்டு ‘‘நான்” எனும் நிலைக்கு நம்மைச் செலுத்தி விடுகிறது. இதனாலேயே நாட்டில் அக்கிரமும், அராஜகமும் ஒருவர் பிறரை அழித்துத் தன்னைத் தான் உயர்த்திக்கொள்ளும் எண்ணமும் செயலும் மலிந்து வருகின்றன. அதனால் மன அமைதி குலைகின்றது. இச்செயல்களினால் அவனவனுடைய சுற்றமும், நட்பும், குடும்பமும், கிராமமும், நகரமும், நாடும் ஏன் உலகும் அமைதி இழந்து நிற்கின்றன.

உலகில் அமைதி நிலவ வேண் டின் நாடுகளில் ஒழுக்கம் நிலவ வேண்டும். நாடுகள் அந்நிலை அடைய, நகரங்கள் அந்நிலை கொள்ள வேண்டும். நகரங்கள் அந்நிலையில் நிலவ, கிராமங்களில் நீதி, நேர்மை, ஒழுக்கம், வளமை மற்றும் அமைதி முதலியவை நிலைக்க வேண்டும். கிராமங்களில் அந்நிலை ஏற்பட கிராமத்தில் உள்ள மக்கள் நீதியுட னும், நேர்மையுடனும், அன்புடனும், மன அமைதியுடனும், தன்னடக்கத்துடனும், பிறரை அன்புடன் அரவணைத்தும் வாழ வேண்டும் என்பது அவசியமாகிறது. மேற்கூறிய நிலைகளை மக்கள் அடைய விஞ்ஞான வளர்ச்சிகள் பயனளிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிந்த உண்மை.

பக்தி நெறி: மேற்கூறிய நிலைகளை மக்கள் அடைய ஒரே மார்க்கமாக பக்தி நெறி விளங்குகின்றது. ஆன்மீகத் துறையில் ஒவ்வொருவரும் இறை உணர்வுடன் வாழ்வதே இன்றியமையாததாகிறது. இறையுணர்வுடன் வாழும் மனிதனின் உள்ளம் முதலில் அன்பை, அதாவது பிறரிடத்து அன்பாகவும் பிறரை மதித்து வாழும் பண்பையும் அடைகிறது. அடுத்துக் கோபதாபம் தவிர்த்துத் தன்னடக்கத்தை வளர்க்கின்றது. இதனால் உள்ளம் பேரவாவினையும் பொறாமையினையும் அகற்றி, உள்ளதைக் கொண்டு வாழும் நிலையை ஏற்கின்றது. மேலாக அடுத்தவர்களை அன்பாக நேசித்து அரவணைத்துச் செல்லும் நிலைக்கு உயர்த்துகிறது. எதிலும் அதிக விருப்பும், வெறுப்பும் கொள்ளும் நிலை மாற்றி யாவற்றை யும் ஒரே நிலையில் சமமாக ஏற்கும் நிலைக்கு மனத்தைப் பக்குவப்படுத்துகின்றது. மேலும் ஐம்புலனையும் அடக்கி ‘‘ஒரே நிலைக்கு” அதாவது ‘‘முக்தி” அடையும் ஒரு நிலைக்கு உயர்த்துகின்றது. இறுதியாக தாம் ஆன்மீக நிலையை அடைய உந்துகின்றது.

இறையுணர்வு கொள்ள ‘‘சரியை” ‘‘கிரியை” ‘‘யோகம்” மற்றும் ‘‘ஞானம்” என்ற நான்கு முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ‘‘சரியை” மற்றும் ‘‘கிரியை” முதலியன ‘‘பக்திப் பாதம்” எனவும் ‘‘யோகம்” மற்றும் ‘‘ஞானம்” முதலியன ‘‘ஞானபாதம்” எனவும் கொள்ளப்படுகின்றன.

இறையுணர்வு தெளிவிக்கும் மந்திர நூல்களையும், பக்திப் பாடல்களையும் ஓதி வழிபாடு செய்வது ‘‘சரியை” எனவும், அடுத்த வர்களுக்கு வழிகாட்டியாக நின்று திருப்பணிகள் செய்வதன் மூலமும் இறைபணிகள் செய்வதன் மூலமும் பக்தியை அதாவது இறையுணர்வினை எய்துவது ‘‘கிரியை” எனவும் கொள்வர் பெரியோர். பக்தி நெறியில் திளைத்து எதிலும் விருப்பு, வெறுப்புக் கொள்ளாமல் சமநிலை என்று மனத்தைப் பக்குவப்படுத்தி இறையுணர்வு கொள்வது ‘‘யோகம்” எனவும் இறையுணர்வு அறிந்துணரும் நிலை யினை எய்தியமை ‘‘ஞானம்” எனவும் கொள்ளலாம். ஞான நிலையின் தன்மையினை அறிய

‘‘அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்த்த ஞானிகள் கண்ட கோவில் தெய்வம் என்று கையெடுப்ப தில்லையே.” என்ற சித்தர் வாபக்கியம் பொpதும் உறுதுணை புரிகிறது.

பக்தி பாதத்திலிருந்து ஞான பாதம் எய்த ‘‘தியான யோகம்” வழிவகுக்கின்றது என்பது அருளாளர்கள் கண்டுணர்ந்த உண்மையாகும். அவ்வாறு ஆன்மிகத் துறையில் மனத்தைப் பக்குவப்படுத்த உரிய வழிமுறைகளில் பக்தி வழிபாடு முதற்படியாக அமைகிறது. அதன் மூலம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் நம் புற அழுக்கை தூய்மைப்படுத்திக் கொண்டு இறையுணர்வினை உணர்த் தும் மந்திர நூல்களையும், பக்திப் பாடல்களையும் மனம் ஒன்றி ஓதி இறைவழிபாடு செய்து, சிறிது நேரமாவது இறைவனை பற்றிய தியானத்தில் அமர்ந்து வருவோமாகில், தம் மனம் மற்ற எல்லாச் சிந்தனைகளிலிருந்தும் விடுபட்டு, ஒருசில வினாடியாவது இறையுணர்வுடன் ஒன்றும் பாக்கியத்தை அடைகிறது என்பதைச் செயல்முறையில் உணரலாம்.

இதையொட்டித்தான் முற்காலங்களில் கிராமங்கள் தோறும் ஆலயங்கள் அமைத்து வழிபாடு செய்து வந்தார்கள் என்பதனை உண ருவதுடன் நாயன்மார்களும், ஆழ்வார்களும், மற்றச்சமயப் பெரியோர்களும் இறைபணியும், திருப்பணியும் செய்து புகழ் எய்தினர். பேறு பெற்றனர் என்பதையும் அறியலாம். (தொடரும்)

ஓம் சக்தி நன்றி: சக்தி ஒளி விளக்கு – 1 சுடர்-1 1982 பக்கம் : 38-40

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here