பாகம் – 3
மறுநாள் 1.30 மணிக்கு அவனுக்குத் தேர்வு ஆரம்பம். என் வண்டியில் ஏற்றிக் கொண்டு 12.30 ம்ணி அளவில் அவனைப் பள்ளியில் இறக்கினேன். அவன் நெற்றியில் அம்மாவின் குங்குமம் வைத்தேன். அம்மாவின் (அடிகளார்) படம் என்னிடம் இருந்தது. அதைக் கொடுத்து, உன்னுடைய அடையாள அட்டையுடன் இதையும் வைத்துக் கொள் என்றேன். சக்திஒளி புத்தகம் இருந்தது. அதையும் கொடுத்தேன்.
நேர்முகத் தேர்வுக்குப் போகும் முன்பாக, உன்னால் முடிந்தவரை ஓம்சக்தி என்ற மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டே இரு ! ஆதிபராசக்தி கருணை வைத்தால் அந்த ஆசிரியர் உனக்கு மதிப்பெண்கள் அள்ளிப் போட்டு விடுவார். தைரியமாகப் போ ! என்றேன்.
நான் வெற்றி பெற்றால் உங்களுக்குச் செல்போனில் தெரிவிப்பேன். நீங்கள் பள்ளிக்கு வந்து அழைத்துக் கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் தொடர் உந்து வண்டியில் வீட்டிற்கு வருவேன் என்றான்.
6.00 மணி ! என் மகனிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. எனவே, என் மனைவியும் நானும் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றோம். அப்போதுதான் அவனும் வெளியே வந்து கொண்டிருந்தான்.
என் மகன் சொன்ன வார்த்தைகள், “ அப்பா வணங்கும் சாமியால்தான் நான் தேர்வில் வெற்றி பெற்றேன்”.
“ தேர்வு அறைக்குப் போவதற்கு முன்பாக 1000 முறைக்குமேல் ஓம்சக்தி என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சக்தி ஒளியை எழுத்துக் கூட்டி ஒரு பக்கம் வாசித்தேன். எல்லாம் சக்தியின் அருளால்தான் வெற்றி கிடைத்தது ” என்று அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணனிடமும் என் மகன் கூறியுள்ளான்.
நன்றி,
சக்தி, பிரான்ஸ்
சக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் – 38-40.
]]>