அங்கே…..

பையன் நன்றாக உறங்குவது போலப் படுத்துக் கொண்டிருந்தான். தலை மாட்டில் ….தலையணைக்கு அடியில்…..

புத்தம் புதிய வேப்பிலைகள் கொத்துக் கொத்தாய் வரிசையாக வைக்கப் பட்டிருக்கின்றன.

பையன்………

உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு, அறுவை சிகிச்சை முடிந்தவன் போல அயர்ந்து கிடக்கிறான்.

மூச்சுத் திணறல் இருந்த நெஞ்சுப் பக்கம் பேண்டேஜ் போட்டது போல் கட்டப்பட்டிருக்கிறது. துணியின் மேலே இரத்தத் துணிகளின் கறை லேசாகப் படிந்து தென்படுகிறது. பாண்டேஜ் துணிக்கு உள்ளே நன்றாகக் கசக்கி வைக்கப்பட்ட நிலையில் ஒரு கை வேப்பிலை இருக்கிறது. பையன் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறான்.

சாரி சாரியாக மக்கள் வந்தும் போயும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வியப்பு…..பரபரப்பு…..விந்தை…..சலசலப்பு…..ஊரெல்லாம் ஒரே பேச்சு !

கொஞ்ச நேரம் கழித்துக் கண் விழித்துப் பார்க்கிற பையனுக்கு ஏதும் புரியவில்லை. மூச்சுத் திணறல் இல்லை….சளி அடைப்பு இல்லை…..பல மாதங்களாகச் சரியாகப் பசி எடுக்காமல் இருந்த பையன், “ அம்மா பசிக்கிறது, சோறு போடு ! “ என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்.

இந்த மருத்துவத்தைப் புரிந்த மகா சக்தி ஏது ? மருவத்தூர் சக்தி அல்லாமல் வேறு ஏது ? அருள்திரு அடிகளார் என்னும் அன்புறு வடிவம் தாங்கித் தேடிச் சென்று அருள்புரியும் தெய்வ சக்தியல்லாமல் வேறு ஏது ?

அடிகளார் என்னும் அருள்மிகுந்த சொல்லுக்கு அர்த்தமே அது தானே…?

அடிகளார்தான் இதை நிகழ்த்தினார்கள் என்பதற்கு ஆதாரம்தானே தேவை…? மேற்கொண்டு படியுங்கள்.

நன்றி ,

சக்தி ஒளி – விளக்கு 12; சுடர் 6; 1993.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here