பூம்புகாரைச் சேர்ந்த பேராசிரியர் சக்தி. சோமசுந்தரம் அவர்கள் தாம் கேட்டறிந்த அனுபவம் ஒன்றை எழுதியிருந்தார்.அதன் விபரம் வருமாறு.
தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், செம்பொன்னார் கோயில் மன்றம்.
அன்னை அருளால் , அன்னையின் பணியினை, அருமையாகச் செய்யும் தொண்டர்கள் இம்மன்றத்தில் உண்டு. அவர்களில் ஒருவர் சக்தி..அவயாம்பாள் அவர்கள். அன்னையை நம்புவதில் அந்த மன்றத்தின் தலைவிக்கு இணையாகவும், துணையாகவும் இருப்பவர்.
சக்தி. அவயாம்பாள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஒரு இஸ்லாமிய நண்பர். செம்பொன்னார் கோயிலில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு. நான்கைந்து வயதுச் சிறுவன் அந்தப் பையன்.
அந்தப் பச்சைப் பிள்ளைக்கு ஒரு நோய். Primary complex முற்றிய நிலை. நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும்…..மூச்சு விட முடிவதில்லை…….பசியில்லை……திணறல்….
பிறந்த நாள் தொட்டுப் பிள்ளைக்கு வைத்தியச் செலவே நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செய்திருப்பார்கள்.
பார்க்காத வைத்தியம் இல்லை. வருந்தாத நாள் இல்லை. நோய் மட்டும் தீர்ந்த பாடில்லை.
சக்தி அவயாம்பாள் பல நேரங்களில் அந்தப் பிள்ளைக்காக வேண்டிக் கொள்வார். பிரசாதம் கொடுப்பார். தீர்த்தம் கொடுப்பார்.
சிறுவனின் பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள், செவ்வாடையணிந்து மற்றவர் வாழ மனமார வேண்டிக் கொள்கிற மன்றத்துச் சக்திகள் ஆகிய அனைவரின் பிராத்தனையும் கனியும் நேரமும் வந்தது.
அன்னை மனம் கனிந்தாள்.
நன்றி ,
சக்தி ஒளி – விளக்கு 12; சுடர் 6; 1993
]]>