“”சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்”. நல்ல உடல்நலம் இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவித்து நன்றாக வாழ முடியும். வரும் முன் காப்பதே நலம். நோய் வந்த பின்பு அவற்றுக்குச் சிகிச்சை செய்யும் பொழுது ஏற்படும் சிரமங்களும் செலவுகளும் மிக அதிகம். அதனால்தான் “ அம்மா “ நோய் வராமல் தடுப்பதற்கு பல எளிய மருந்துகளை அருளியுள்ளாள்.அவற்றைத் தவறாமல் கடைபிடித்தால் நோயின்றி வாழ முடியும்.
நோய்கள் வராமல் தடுக்க :
நோயின்றி வாழ “ அம்மா “ பல வழிமுறைகளைக் கூறியுள்ளாள். அவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதுமானது.
- தினமும் மூன்று வேப்பிலையைத் தவறாமல் சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.
- எலுமிச்சம்பழச்சாறு, வேப்பிலை, மிளகு, சுக்கு அனைத்தையும் வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடித்து வர வேண்டும்.
- கொத்தமல்லி, துளசி, வேப்பிலை, இஞ்சிச்சாறு இவற்றுடன் தேன் கலந்து குடிப்பது உடம்புக்கு நல்லது.
- வெள்ளைப் பூண்டின் சாறு, முள்ளங்கிச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு மூன்றையும் வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது.
- நல்ல உடல் நலத்திற்குக் கொடி வேர்க்கடலை, அவல், தேன் மூன்றையும் கலந்து சாப்பிடலாம்.
- பச்சரிசி, கோதுமை, கேழ்வரகு இவற்றை களி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
- இஞ்சி, துளசி, எலுமிச்சம் பழம் இவற்றைச் சாறாகத் தயாரித்து அதில் தேன் கலந்து அதனுடன் வெந்நீர் சேர்த்து மாதம் ஒரு முறை குடித்து வரலாம்.
- எலுமிச்சம் பழச் சாற்றோடு, துளசியுடன் பூண்டை வெந்நீரில் கசக்கிய சாற்றோடு கலந்து குடித்து வர வேண்டும்.
- புளித்த நீரில், அரை உப்புப் போட்டு குடித்து வருவது நல்லது.
- வாரம் ஒரு முறை கேழ்வரகுக் கஞ்சி, சோளக்களி, பூண்டு, பனங்கற்கண்டு சாப்பிட்டு வருவது நல்லது.
- நோய்கள் வராமல் தடுக்க வேண்டுமானால் உப்பு, புளி, காரத்தைக் குறைக்க வேண்டும்.
- வாரத்திற்கு ஒரு நாள் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும்.
நன்றி,
அன்னை ஆதிபராசக்தி அருளிய மருந்துகள்
]]>