அருள்திரு அடிகளார் ஒருமுறை பவானிக்கு வந்த சமயம். நம் பக்தர்களும் தொண்டர்களும் அடிகளாருக்குப் பாதபூசை செய்தார்கள்.பின்பு,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அங்கிருந்த அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.அந்தக் கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு ஆராதனை காட்டும் சமயம்,அடிகளார் அந்த அம்மனை வணங்கியவாறே,கருவறை முகப்பின்மேல் பார்வையைச் செலுத்தினார்கள்.
தீபாராதனை முடிந்ததும்,கோயில் அர்ச்சகரிடம் அடிகளார்,“இந்தக் கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள்.இது லட்சணமாக இல்லை.” என்று கூறினார்.
‘இந்தக் கோயிலுக்கு வருமானம் இல்லை…இதற்குத் திருப்பணி செய்யலாம் என்று இருக்கிறோம்.அப்போது மாற்றி விடுகிறோம்’என்று கோயில் நிர்வாகத்தினர் கூறினார்கள்.
“முதலில் இந்தச் சிலையை மாற்றுங்கள்.பின்பு திருப்பணி செய்யலாம்.வருமானம் தானாக வரும்.இந்தச் சிலை பின்னப்பட்டு இருக்கிறது” என்றார்கள்.
அதன்பிறகு ஊர்ப்பெரியவர்கள் அடிகளார் சொன்னபடி அழகாகவும்,லட்சணமாகவும் இருக்கும்படி கஜலட்சுமி சிலையை வடிக்க ஏற்பாடு செய்தார்கள்.சிலை தயாரானது.கோயிலில் கருவறை வாசலுக்கு மேலே அதை நிறுவினார்கள்.
அது முடிந்தபிறகு அன்றே ஓர் அதிசயம் நடந்தது.அந்த ஊரில் காமாட்சியம்மன் பக்தர் ஒருவர். அவருக்கு லாட்டரி சீட்டில் 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது.லாட்டரியில் விழுந்த அப்பெருந்தொகையை காமாட்சியம்மன் ஆலயத்தைப் புதுப்பிக்கவும் கும்பாபிடேகம் செய்யவும் அப்படியே நன்கொடையாக வழங்கிவிட்டார்.
‘இந்தக் கஜலட்சுமி சிலையை முதலில் மாற்றுங்கள் வருமானம் தானாக வரும் ! என்றார்
அடிகளார்.அவர் சொன்னபடியே நடந்தது.’
ஓம்சக்தி !
சக்திஒளி பக்கம்-62,
ஏப்ரல் 2009.