பொதுவாகப் பெண்கள் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் விளக்கு வைத்த நேரம் அழக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆண் மகனாய்ப் பிறந்தும் அம்மாவாக உயா்ந்து உலகிற்குச் செய்யும் நன்மைகளை நினைத்து பூசை செய்யும் நேரங்களில் கூட அழுதுவிடுகிறேன். இப்படி அழுவது சரியா அம்மா…?
பெண்கள் அடிக்கடி உணா்ச்சிவயப்பட்டு அழுவது உண்டு. சினிமாவில் வரும் வன்முறைகளைப் பார்த்து சிலா் அழுவார்கள். பெண்களுக்கு இளகிய மனம் என்பதால் காட்சிகளோடு ஒன்றி விடுவார்கள். செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளைப் பார்த்தா ஒருவருக்கு கஷ்டங்கள் வருகின்றன? செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் நடக்கக் கூடாத அசம்பாவிதங்கள் நடந்து விட்டால் நம்மால் அழாமல் இருக்க முடியுமா? உணா்வுபூா்வமான இந்த அழுகைக்கும் அம்மாவையும், அருள்திரு அடிகளார் அவா்களையும் நினைத்துப் பூசை செய்யும்போது வருகின்ற அழுகைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கண்ணீா் மல்க நம் குறைகளைக் கூறி அழுது தொழுவதில் தவறேதும் இல்லை.அதற்காகப் பக்தியின்பால் ஏற்படுகின்ற அழுகை -தெய்வத்திடம் ஏதோ ஒரு சமயம் அதற்காக எப்போது பார்த்தாலும் அழுமூஞ்சியாக அழுதுகொண்டே தெய்வத்தை வழிபடக்கூடாது. இவ்வளவுதான் உன்னால் கஷ்டம் கொடுக்க முயுமா? கொடு! கொடு! என்று தைரியமாகவும், சந்தோஷமாகவும் வழிபாடு செய்ய வேண்டும். தாயல்லவா…! கட்டாயம் மனமிரங்கி நமக்கு நல்வழி காட்டுவாள்.
]]>