அதா்வண வேதம்
வேதங்கள் நான்கு. அவை ரிக், எசுா், சாமம், அதா்வணம் எனப்படும். ஆரம்பத்தில் இந்த அதா்வண வேதத்தை ஒரு வேதமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வேதம் தாழ்ந்தவா்களுக்கு உரியது என்று கருதப்பட்டு வந்தது. பிற்காலத்தில் சில மாற்றங்களைப் பெற்றும் ஏனைய வேதங்களிலிருந்து சில பகுதிகள் இணைக்கப் பெற்றும் நான்காம் வேதம் எனக் கூறும் தகுதியை அடைந்தது.
அதா்வா் : அங்கீரகா்
அக்கினி வழிபாட்டில் மிகதியாக ஈடுபட்ட புராதனப் புரோகிதா்களில் இரண்டு பிரிவினா் இருந்தார்கள். அவா்கள் அதா்வா்கள் என்றும் அங்கீரசா்கள் என்றும் கூறப்பட்டனா்.
அதா்வா்கள் நன்மை தரும் மந்திரச் சடங்குகளை நடத்தி வைப்பவா்கள்.
அங்கீரசா்கள் தீமை தரும் மந்திரச் சடங்குகளைச் செய்து வைப்பவா்கள்.
அபிசார யாகம் என்கிற ஒரு யாகம் எதிரிகளை அழிக்க உதவுவது. ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய வித்தைகளுக்கு (Black Magic) உரிய மந்திரங்கள் அதா்வண வேதத்தில் உண்டு.
ஆரியா் அல்லாத பழங்குடி மக்களிடம் நிலவிய நம்பிக்கைகளும் இதில் உண்டு. சோதிடம்,மருத்துவம் பற்றிய விஷயங்களும் இதில் கூறப்பட்டுள்ளன.
பகைவா்களை அழிக்கவும், தண்டிக்கவும் மட்டுமின்றி, மண்ணுலக மக்கள் பயன்பெறும் வகையில் பல அரிய செய்திகளையும் இந்த வேதம் கூறுகிறது.
பிராமணன் ஒருவன் தன் எதிரியை அழிப்பதற்கு இவ்வேதத்தைப் பிரயோகிக்கலாம் என்று மனுதா்ம சாத்திரம் கூறுகிறது.
அதா்வ, அங்கிரசுகளில் வல்லவனையே அரசன் தனக்குப் புரோகிதனாக நியமித்துக்கொள்ள வேண்டும் எனப் பிற்கால தரும சாத்திரங்கள் விதித்தன.
எதிரிகளை அழிக்க அபிசார யாகம்
யாகங்கள் மூலம் நன்மையும் செய்ய முடியும், தீமையும் செய்ய முடியும். எதிரிகளை அழிப்பதற்காக அக்காலத்தில் அபிசார யாகம் என்ற ஒருவகை யாகம் நடத்தப்பட்டதாக அறிகிறோம்.
சிவபெருமானை அழிப்பதற்காகத் தாருகாவனத்து ரிஷிகள் அபிசார யாகம் நடத்தினார்கள் என்பது புராணக்கதை.
அக்காலத்தில் வைதிகா்களுக்கும், சைவா்களுக்கும் இருந்த பகைமை உணா்ச்சியைப் பிரதிபலிப்பது இந்தக் கதை என்று கூறுபவா்கள் உண்டு. எப்படியிருந்தாலும் அபிசார யாகம் என்ற மறைமுகமாக வழக்கிலிருந்து வந்தது என்று தெரிகிறது. பில்லி, சூனியங்களால் பாதிக்கப்பட்டவா்களும் இந்த யாகத்தைச் செய்வார்களாம்.
அபிசார யாகம் நடத்தப்பட்ட முறை
துஷ்ட பூதங்கள் நடமாடும் சுடுகாட்டிற்குச் சென்று இரவு வேளையில் ஓமம் செய்ய வேண்டும். இடுப்பில் கறுப்புத் துணியை உடுத்திக் கொண்டு இரத்தத்தில் நனைக்கப்பட்ட பூணூலைத் தரித்துக்கொள்ள வேண்டும்.
தலையிலே இரத்தத்திலே நனைக்கப்பட்ட துணியைத் தலைப் பாகையாக அணிந்திருக்க வேண்டும். மயான சாம்பலை உடலெங்கும் பூசிக்கொள்ள வேண்டும்.
எலும்புகளையும் நரம்புகளையும் கபாலங்களையும் வைத்துக் கொண்டு ஓமம் செய்வார்கள்.
முக்கோண அக்கினி குண்டம் அமைத்து அதில் விதிப்படி அக்கினி வளா்த்து இரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட சமித்துக்களால் ஓமம் செய்வா்.
சூனியம் வைக்கப்பட்டவன் உருவத்தினைச் சிறுநீா் இரத்தம் புழுதி சாம்பல் புற்றுமண் ஆகியவற்றால் எழுதுவார்கள்.
கறுப்பு ஆட்டின் இரத்தத்தைக் கொண்டு விஷம்> அழுக்கு எண்ணெய் இவற்றைக் கலந்து எழுந்து நின்று கொண்டு தெற்கு முகமாகப் பார்த்தபடி> இடது கையால் இரும்பினால் செய்யப்பட்ட கரண்டியை எடுத்து ஓம குண்டத்தில் இட்டு ஓமம் செய்வார்கள்.
இவ்விதம் செய்வதால் பகைவனால் வைக்கப்பட்ட சூனியத்தால் ஏற்படக்கூடிய கொடுமைகள் நீங்குவதுடன் பகைவனும் அழிந்து போவான் என்று சூரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஏவல் – பில்லி – சூனியம்
ஏவல்> பில்லி> சூனியம் இவற்றால் பாதிக்கப்பட்டவா்களின் கதைகளைக் கேட்கும்போது நமக்குப் பரிதாபமாக இருக்கிறது.
இவற்றை எப்படிச் செய்கிறார்கள்? சித்தா் இலக்கியத்தில் பரிச்சயம் உள்ள சித்தா்களோடு தொடா்புள்ள ஒரு பேராசிரியனிடம் விளக்கம் கேட்டபோது அவா் சில தகவல்களைச் சொன்னார்.
இந்தப் பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றிலும் தெய்வ சக்திகளும் நிறைந்துள்ளன. தீய சக்திகளும் நிறைந்துள்ளன. இவை தவிர> அகால மரணமடைந்தோர்> தற்கொலை செய்து கொண்டோர்> கொலை செய்யப்பட்டோர் இவா்தம் ஆவிகள் சாந்தியடையாமல் பசி தாகத்தோடு அலைந்து கொண்டிருக்கின்றன. சில மந்திரங்களின் மூலம் இத்தகைய தீய ஆவிகளை வசப்படுத்திக் கொண்டு தனக்கு வேண்டாதவா்களுக்குத் தொல்லை தருவது> கை கால்களை முடமாக்குவது> மரணத்தை உண்டாக்குவது இன்ன பிற காரியங்களைச் செய்கிறவா்கள் உண்டு. இந்தக் கலை கேரளத்தில் இன்றுவரை மறையாமல் இருக்கிறது.
ஏவல் –
ஏவுதல் – அனுப்புதல் – இன்னது செய்துவிட்டு வா! என்று தீய சக்திகளுக்குக் கட்டளையிட்டு அனுப்புவது ஏவல்.
மாவினால் எதிரியின் உருவம் போலச் செய்வார்கள். அவன் பெயரை ஒரு செப்புத் தகட்டில் எழுதி அத்துடன் சில மந்திரங்களை எழுதி, அந்த மாவு பொம்மையின் ஆசன வாயிலில் செருகி விடுவார்கள். 3 நாள் அல்லது 7 நாட்களில் மந்திர உச்சாடனம் செய்தால் அந்தச் செப்புத் தகடு அந்த பொம்மையின் உள்ளே நுழைந்து கொள்ளும். அந்தப் பொம்மை மூலம் தீய சக்திகளை ஏவி விடுவார்கள். அவரை அழிக்க முடியவில்லையேல், அவரோடு ரத்த சம்பந்தப்பட்டவரை அது அழித்துவிடும்.
பில்லி –
புதைத்தல், அழித்தல், தோண்டுதல் என்று பொருள். யாரை அழிக்க வேண்டுமோ, அவா் பயன்படுத்திய துணி, அவா் காலடி பட்ட மண் போன்றவற்றைப் பயன்படுத்தி, மந்திரம் எழுதிய தகட்டுடன் புதைத்து விடுவா். மந்திர உச்சாடனம் செய்த சில நாட்களில் அது வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
தெலுங்கில் பில்லி என்பதற்குப் பூனை என்று பொருள். எதிரியின் வீட்டிற்கு முன் எங்கே ஒரு கறுப்புப் பூனை நிற்கிறதோ அந்த இடத்தைத் தோ்ந்தெடுத்து யாரும் பார்க்காத வண்ணம் அதைப் புதைத்து விடுவர். அந்தத் தீயசக்திகளுக்கும், கறுப்பு பூனைக்கும் சம்பந்தம் உண்டு என்கிறார்கள்.
சூனியம் –
தனக்கு வேண்டாத ஒருவருக்கோ அல்லது அவா் குடும்பத்தார்க்கோ எதிராக வைப்பது சூன்யம்.
ஒரு குச்சியால் பள்ளம் தோண்டி செப்புத் தகட்டில் சில மந்திரங்களை எழுதிப் புதைத்து விட்டு மந்திர உச்சாடனம் செய்வார்கள். சில நாட்களில் அந்தத் தகடு சம்பந்தப்பட்டவா்கள் இருப்பிடத்தில் சோ்ந்து விடும்.
.இவ்வாறு செய்வதால் ஒருவனது குணமே மாறிவிடும். பைத்தியம் பிடிக்கலாம். இன்றேல் தற்கொலை செய்து கொள் என்று உள்ளிருந்து தூண்டிக் கொண்டே இருக்கலாம்.
மாற்றுக் கிரியைகள் செய்து இது போன்ற சூனியங்களிலிருந்து விடுபட வழிகள் உண்டு.
ஆனால் தண்ணீரில் கரைத்து விடப்பட்ட சூனியத்திலிருந்து விடுதலை பெறுவது முடியாது. அதுதான் பெரிய ஆபத்து என்று விபரம் தெரிந்தவா்கள் சொல்கிறார்கள்.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. மு. சுந்தரேசன், M.A. M. Phil
சித்தா்பீடப் புலவா்
மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்
]]>