பெங்களுரில் ஒரு தாய். அவர் குழந்தை பிறவியிலேயே ஊமை! அது மட்டுமா? பிறவியிலேயே செவிடு! அந்த குழந்தையை வைத்துக்கொண்டு பெங்களுர் ராஜாஜி நகரில் ஒரு திருமணமண்டபத்தில் நடந்த பாதபூசையில் கலந்துகொண்டார்
.
இடுப்பிலிருந்த குழந்தையை ஒரு கையால் பற்றியபடி மறு கையால் பாதபூசை செய்த போது அந்தக் குழந்தை இடுப்பிலிருந்து துள்ளிக்குதித்து அடிகளார் திருவடி மேலும் பாதபூசைத் தட்டிலும் விழுந்தது. அதன் முகம், வயிறு, உடம்பெல்லாம் பாதபூசை தீர்த்தம் பட்டுச் சிதறியது. உடனிருந்த செவ்வாடைத் தொண்டர்கள் அந்தப் பெண்மணியைத் திட்டித் தீர்த்தார்கள். அது அம்மாவே நடத்திய மௌன நாடகம் என்று யாருக்கும் தெரியாது.
அந்த திருவடிகளின் ஸ்பரிசம் பெற்ற மறுநாள் அக்குழந்தை அம்மா! அப்பா! என்று பேசத்தொடங்கிவிட்டது. பக்கத்தில் வெடிச்சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்காத அந்தக் குழந்தை சத்தம் கேட்டுத் தலையசைக்கும் உணர்வைப் பெற்றுவிட்டது. ஆம்! பிறவி ஊமைத்தன்மை நீங்கிவிட்டது. பிறவிச் செவிட்டுத் தன்மையும் நீங்கிவிட்டது.
om sakthi