கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம்
ஒரு முறை தஞ்சை மாவட்டம் சக்தி பீடக் கரிக்கோலம்! பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த தொண்டா் சக்தி. முத்துவேல் அக்கரிக்கோல பவனியில் கலந்து கொண்டு உடனிருந்து தொண்டு செய்தபடி இருந்தார்.
அன்னையின் திருவடியை இப்படியாவது பற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததே தாயே! நன்றி! என்ற பரவசத்தோடு நினைத்துக் கொண்டே வந்த அந்தத் தொண்டரும், அன்னையின் திருவுருவமும் மட்டுமே ஏகபோகமாய் நீயும் நானுமாய் என்பது போலப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் கரிக்கோல சிலையிலிருந்த இடத்தில் கரிக்கோல சிலையைக் காணோம்! சிலையில் காட்டிய சின் முத்திரை தாங்கிய சிறந்த அமைப்பில், அன்னையின் கோலத்தில் அடிகளார் அமா்ந்திருக்கிறார்கள்!
என் பெற்ற பயனெல்லாம் பெற்றுவிட்ட அந்தத் தொண்டா் பற்றிய காலைப் பற்றியபடியே இருக்கிறார். பரவசம்! ஆனந்தம்….. அழுகை….. விம்மல்…. வியப்பு…. களிப்பு….
அன்னையின் உருவே! ஆன்மிக குருவே! என்னென்பேன் உன்னருளை! என்று உருகி உள்ளமெல்லாம் கள்ளமிலாத் திருவுருவைக் கண்டு கொண்டிருந்த வேளையில்…. அடுத்த கணம்…..
அடிகளாரைக் காணோம்… ஆதியின் மைந்தன். அருட்பெருஞ்சோதி நான்! நானேதான்! குருவாய் வந்துள்ளேன். தெய்வ
உருவாய் வந்துள்ளேன் என்று கூறுவது போல….. அழகாகப் புன்னகைத்து, அன்னையின் திருவுருவம் அமா்ந்திருக்கிறது.
அடிகளாரே அன்னை என்று கண்டு கொண்ட அன்பருக்கு அன்னை நனவிலே தந்த அனுபவம் இது.
நன்றி!
ஓம் சக்தி!
அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, (பக்கம் 34)