மன அடக்கத்திற்கு வழி
“ஒரு வண்டி ஒழுங்காக ஓடவேண்டும் என்றால் சக்கரம் வேண்டும். அச்சு வேண்டும்; எண்ணெய் வேண்டும். அதுபோல உன் மனம் அடக்கமாக ஓட வேண்டுமானால் உன் எண்ணங்கள், உன் செயல்கள், மூளை மூன்றும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.”
மனம் அடங்க வேண்டும், அடங்க வேண்டும் என்று வேட்கை முதலில் வேண்டும். எண்ணங்களுக்குக் கடிவாளம் இட்டால், மூளை செயல்களுக்குக் கடிவாளம் இடும். மனமும் அடங்கும். பணம் சம்பாதிப்பதிலும், தொழில் செய்வதிலும், பிறா் புகழ்ச்சியைத் தேடுவதிலும் ஒரு நிதானம் வேண்டும். இவை மட்டுமே வாழ்க்கை என நினைக்கக் கூடாது.
ஆசைகளும், பொறாமையும் தான் தோன்றிகள்! அவை தோன்றத்தான் செய்யும். அவற்றை அடக்கி ஒரு கட்டுக் கோப்புக்குள் வைத்து, தெய்வ சிந்தனை, வழிபாடு, உழைப்பு, தியானம், மௌனம், போன்றவற்றை வாழ்க்கையில் பெருக்க வேண்டும். பிறா் போற்றுதலுக்கும், கைதட்டலுக்கும், தேவைக்கு மீறிய பொருளுக்கும் ஆசைப்படும் எண்ணங்களை ஒடுக்க வேண்டும். பிறகு மன அடக்கம் தானே வரும்.”
அன்னையின் அருள்வாக்கு
நன்றி!
ஓம் சக்தி!
மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்
]]>