கோடான கோடி மக்களிற்கு நீ சாமி
ஓயாது பலர் பாரத்தை தாங்கும் பூமி
அம்மனை வணங்காத நானும்
அம்மனை வணங்குகிறேன்
உன்னை வணங்குகிறேன்
”முலமந்திரம்” நான் சொன்னதில்லை
மூலம் நீ தான் என்பதை சொல்லாமல் இருப்பதில்லை
கண்ணுக்குத் தெரியும் நீயே எனக்கு சக்தி
தவமின்றி நான் பார்த்த சிவப்பு சிவன்
கந்தல் துணி கட்டியவனின்
இன்னல் தனை போக்குவதனால்
நீயே எனக்கு கந்தசாமி!
கணேசனை பற்றி கவலையில்லை எனக்கு
மனிதனேசன் நீ என்பது சரியான கணக்கு
கருவறையில் நம்மை சுமந்த பெண் இனத்தை
கருவறையில் கோயிலில் அனுமதித்தாய்
அனுமதித்த தாய்!
தீட்டிற்கு வைத்தாய் நீ வேட்டு
உன் கோயிலில் ஏது நுழைவுச் சீட்டு?
ஆச்சாரம் பார்க்காத அன்பின் சாரம்
ஆன்மீக புரட்சி எல்லாம் உன்னை சேரும்
நன்றி
வீ.இளங்கோ
திரைப்பட பாடலாசிரியர்.
]]>