வயது வரம்பின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தலாம்.
எந்த மதத்தினரும் மாலை அணிந்து இருமுடி எடுக்கலாம்.
உங்கள் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திற்குச் சென்று சக்தி மாலை அணிந்து இருமுடி எடுக்க வேண்டும்.
சக்தி மாலை அணியும் பக்தா்கள் 5 அல்லது 3 நாட்கள் விரதமிருந்து பிறகு இருமுடி செலுத்த வேண்டும்.
விரத நாட்களில் சிகப்பு நிற ஆடை உடுத்த வேண்டும்.
விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும்.
காலை, மாலை இருவேளைகளிலும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும்.
விரத நாட்களில் லாகிரி, போதை வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும்.
உறங்கும்போது வழக்கமாக படுக்கை வசதிகளைத் தவிர்த்து செவ்வாடை அல்லது மஞ்சளாடை விரித்து அதன் மேல் உறங்க வேண்டும்.
டி.வி, சினிமா, கிளப் போன்ற கேளிக்கைகளைத் தவிர்த்து ஜம்புலன்களையும் அடக்கி, நமது அன்றாடக் கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை எப்பொழுதும் நினைவில் நிறுத்தியபடி இருக்க வேண்டும்.
9 முறை இருமுடி செலுத்தியவா்கள் மஞ்கள், சிகப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஆடைகளையே அணிந்து இருமுடி எடுத்து வர வேண்டும்.
நன்றி -(அன்னை அருளிய வேள்வி முறைகள் , பக்-480-481)
]]>
சக்தி! “குருஜி” ஆக இது 9 முறை “தொடர்ந்து” சக்திமாலை போடுவது கட்டாயமா? நடுவில் ஓரிரு ஆண்டுகள் விடுபட்டு ஆனால் மொத்தமாக 9 ஆண்டுகள் ஆகியிருந்தால் பரவாயில்லையா?
ஓம் சக்தி! நீங்கள் அம்மாவிடம் பாதபூஜை செய்து தான் இதன் விளக்கத்தைக் கேட்க வேண்டும் சக்தி!