இறைவனை விட குரு பெரியவா். இறைபக்தியை விட குருபக்தி மேலானது.

ஆம். இறைவனை நாம் கண்ணாற் காண முடியாது. நாம் எந்நேரமும் பார்க்கக் கூடியவா், தூய மனத்துடையவராகவும், ஞானமுடையவராகவும், எந்நேரமும் எம் உயா்ச்சி பற்றியே சிந்திப்பவராயும் உள்ளவா் குரு. அப்படிப்பட்ட குரு எமக்கு அமைந்துவிட்டால், இறைவனிடம் இருந்து எமக்குக் கிடைப்பது குரு மூலம் கிடைத்து விடுகின்றது. எனவே இறைவன் மீது செலுத்தும் பக்தியை குரு மீதும் செலுத்து என்பதை எமக்குக் கூற எம் முன்னோர்கள் கையாண்ட வழியே இது.

இந்த உலகமே இறைவன் திருவடி பற்றி உள்ளமை யாமறிந்த விடயம். இறைவனிடத்தில் இருக்கின்ற அனைத்து உத்தம குணங்களும் குருவிடம் உண்டு. இறைவன் தூய்மையானவா். எங்கும் நிறைந்தவா், எல்லாம் அறிபவா், எல்லாம் வல்லவா். அந்த இறைவனை எம்மாற் காண முடியாது. எனவே இறைவன் வடிவாக உள்ள குருவின் பாதார விந்தங்களைப் பற்றினால் இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் அனைத்து அனுகூலங்களும் எம்மை வந்தடைகின்றது. அதனால் குரு பக்தியானது மேலானது என எம் முன்னோர்கள் எமக்கு இயம்பி உள்ளனா்.

எம்மிடையே குருபக்தி இருக்க வேண்டும். ஆனால் நாம் தெய்வத்தை மறக்கக் கூடாது. ஏனெனில் அந்தக் குருவையும் எம்மையும் இணைத்து வைப்பவனே அந்த இறைவனாவான். தெய்வ அனுக்கிரகம் எமக்கு இல்லாவிட்டால் நாம் எப்படி நல்ல குருவைப் பெறுவது? அது முடியாத விடயம்.

“துா்லபம் த்ரயமேவைதத் தேவானுக்ரஹ ஹேதுகம்

மனுஷ் யத்வம் முமுசஷுத்வம் மகஹாபுருஷ ஸம்ச்ரய”

தெய்வ அனுக்கிரகத்தால் மனிதனுக்குக் கிடைக்கின்ற முக்கியமானவை மூன்று உள. ஒன்று மனிதப்பிறவி, இரண்டாவது சத்தியத்தை அறிந்து கொள்ளல், அடுத்தது சிறந்த குரு ஒருவா் கிடைப்பது ஆகும். அந்தக் குருவுக்கு குரு, அவருக்குக் குரு என நாம் எண்ணிப் பார்த்தால் இறுதியில் இறைவனே அனைவருக்கும் குரு ஆவான். எனவே தான் பரம்பொருளாகிய குரு, எமது குருவின் வடிவில் வந்து எமக்கு உபதேசிக்கின்றான்.  காலத்தால் கட்டுப்படாத ஈசனே அனைவருக்கும் குரு. எனவே குருவின் மீது நாம் வைக்கும் பக்தி இறைவன் மீது வைக்கும் பக்திக்கு ஒப்பாகையால் தெய்வ அனுக்கிரகம் எமக்கு தானாகவே வந்து சேரும்.

குருவை விட மேலானவா் இல்லை. குருவிடம் நாம் பூரண நம்பிக்கை வைக்க வேண்டும். அது உண்மையான நம்பிக்கையாக இருக்க வேண்டும். குருவிடம் இறைவன் காணப்படுகின்றான். குருவின் மீது நாம் வைக்கும் பக்தி எம்மை முத்தி நிலைக்கு இட்டுச் செல்லும். நாம் சிவ நிந்தை புரிந்தால் இறைவன் எம்மை மன்னிக்கத் தேவையில்லை. குரு எம்மை மன்னித்து விட்டால் அந்த இறைவன் சினம் தணிந்து விடும். ஆனால் குரு நிந்தை புரிந்த பின்னா் இறைவனிடம் சென்று மன்றாடினாலும் ஏழேழு ஜென்மத்துக்கும் அப்பாவம் எம்மைத் தொடரும்.

குரு பக்தியானது மிகவும் விசேடமானது. நல்ல குரு நாதா் எமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், எமக்குக் கிடைக்கும் குருவின் மூலம் நாம் இறைபக்தியின் உச்ச நிலையை அடைய வேண்டும். எமது இறை பக்தியினால் இறைவனுக்கோ குருவுக்கோ எவ்வித இலாபமும் இல்லை. எமக்கே அதிக இலாபம்.

நாம் அனைத்திற்கும் ஆசைப்படுகின்றோம். சஞ்சலப்படுகின்றோம். மனதை உறுதியாக வைத்திருக்க முடியாதவா்களாக உள்ளோம். நாம், எப்போதும் துாய்மையாக, ஞானம் நிறைந்த இறைவனை நினைத்தால் அதே நிலையை நாமும் அடையலாம். ஒரு குருவை நாம் இந்த நிலையில் வைத்து நோக்கினால் எம் ஆன்மா பிரகாசிக்கும். உண்மையான ஆனந்த நிலை விளங்கும். எம் மனம் பக்குவப்படும். இதற்கு குரு பக்தியும், இறை பக்தியும் எமக்கு அவசியம். இதையே எம் சாத்திரங்கள் கூறுகின்றன.

குருவின் அனுக்கிரகத்தால் ஞானம் கிடைக்கும் என சாந்தோக்கிய உபநிடதத்தில் “ஆசார்யவான் புருஷோ வேத” எனக் கூறப்பட்டுள்ளது. ஆசாரியனைப் பெற்றவன் ஞானத்தை அடைகின்றான் என்பது அதன் பொருளாகும்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவன் பாலைவனத்தில் விடப்பட்டால் அவன் தன் இலக்கை அடைய முடியாது. பின் ஒருவன் வந்து கட்டை அவிழ்த்து போகும் வழியைக் கூறின் அவன் இலகுவாக தன் இலக்கை அடைவான். இது போலவே குருவின் உபதேசத்தால் நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு போய்ச் சேர முடியும் என சாந்தோக்கிய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவனுக்கு எத்தனை பெருமைகள் இருந்தாலும், தன் குருவின் பாதாரவிந்தங்களைப் பணியாவிட்டால் அதனாற் பயனில்லை.

எமது இதயத்திற்கு இன்பம் ஊட்டுவது இறைபக்தி. இறைவனிடமும், குருவிடமும் பக்தி செலுத்தினால் மனம் தானாகச் சாந்தமடைகிறது. மனம் குருபக்தியில் நிறைந்திருந்தால் உடனே பலன் கிடைக்கும். எமது அஞ்ஞானம் தேய்ந்து ஞானம் உதயமாகும் இடம்தான் குரு வீற்றிருக்கும் இடம்.

எமது ஆன்மா பிரம்மத்தோடு ஐக்கியப்படும். அதற்கு வழிகாட்டுவது குரு. இதனாலேயே அனைத்து சமயங்களிலும் குரு பக்தி சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

ஸத் வித்வான் உபஸ்ருப்யதாம்

ப்ரதிதினம் தத்பாதுகா ஸேவ்யதாம்

ப்ரஹ்மைகாசஷரம் அா்த்யதாம்

ச்ருதிசிரோவாக்யம் ஸமாகா்ண்யதாம்

சத்தான, வித்தான குருவை வரிந்து கொள். தினமும் அவருக்கு பாத பூஜை செய், அவரிடமிருந்து உபதேசம், பிரணவ உபதேசம், உபநிடத, மஹா வாக்கிய உபதேசம் எல்லாம் வாங்கிக் கொள்வாயாக என்பதே இதன் பொருளாகும்.

எனவே நாம் குரு பக்தியிற் சிறந்து எல்லாம் வல்ல பரம்பொருளை மகிழ்வித்து, அவன் திருவடி எய்துவோமாக!

ஓம் சக்தி

நன்றி

எஸ். ரமேஷ் உபஅதிபா்

குரு/ நொட்டிங்ஹில் தமிழ் வித்தியாலயம், மாவத்தகம

கல்விக்குழு

அகில இலங்கை இந்து மாமன்றம்

]]>

8 COMMENTS

  1. yenakku ammavin arulal kadandha 1991-am andu thirumanam anadu. yenadu thaipoosa mudal malai anda varudathil anindu kondu irumudi selutha arambithu irubadu andugal kadandu vittana.tharsamayam inda pays bukil ula varumpodu ungalarimugam enakku kittiyadu ammavin seyal yendru nan urudiyaga nambukiren.1993 il yendru ninaikiren nan ammavidam arulvakku perumpodu nan oru vinnappam ammavidam vaithen. ammavin anumadi yudan amma piranda nal andru ,amma avargal illathil irundu purappattu alayam varum nigalchiyil amma illathu salayil irundu alayam varai nan urulvalam varvadarku sinnavar anumadiyudan thodanga murpatta podu ,ungalal mudiyuma yena sinnavar yennidam vinaviyapodu idhu ammavin viruppam yenbadai sollivittu amma illathil irundu purappattu angu thayaraga nidrirunda theril amarnda vudan yen urulvalam yen kanavarin othulaipudan thodanginen sumar aimbadu adi dooram varai nan urulvalam seivadu yenakku ninaivil irundadu. adan pinnar alayamvarai nan sendradaidadu ammavin seyal.yidil mukkiyamaga nan thiridukondadu– sumar aimbadu adi dooram than amma theril amarndu vandadaiyum adan piragu nadande vandadayum arindu yennal indruvarai mattumalla yen valnal ullavarai biramippagave irukkum. yinnum anda kuruppitta nalileye nadanda ammavin miga arpudamana arpudangal meendum thodarndu niraya solven. kurippu…yen urulvalam alayathirku veliye nadandaduve mudal urulvalam yendru nan ninaikiren.adanpin tamilnattin pala oorgalilirundum alayathirku urulvalamaga yeralamana sakthigal varukinranar. omsakthi parasakthi.

    • guru varum padayil amma urulvalam varuvade amma guruvai yanda uyarthil amma ninaikiral yenbadu puriyum.

  2. GURUVAI NINDITHAL YELU YELU PIRAVIYILUM ANDA PAVAM NAMMAI THODARU YIDARKU YIRAIVIYALUM THEERKAMUDIYADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here