ஆன்மிக நாட்டமும், அருள் தாகமும் கொண்ட, பக்குவம் வாய்ந்த சீடன் ஒருவனுக்குத் தகுதியான குரு ஒருவரால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில
- ஐம்புலன்களை அடக்குகின்ற உபாயத்தைக் கற்றுக் கொடுப்பார்.
- 36 கருவிகளை ஒடுக்கிப் பாச ஞானத்தை அளிப்பார்.
- ஒருவன் தன்னை அறியும் ஆன்ம ஞானத்தை ஊட்டுவார்.
- ஒருவன் உள்ளத்தில் இறை ஞானத்தை ஊட்டுவார்.
- சீடனின் பாவ புண்ணியங்களை நீக்கிப் பக்குவப்படுத்துவார்.
- ஆன்மாவில் படிந்துள்ள அழுக்குகளைத் தீட்சைகளாலே நீக்கிச் சுத்தப்படுத்துவார்.
- சீடனின் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களை அறிவிப்பார்.
- பேசா மௌனத்தில் சீடனை நிறுத்துவார்.
- உடம்பில் உள்ள குண்டலினி சக்தி கிளா்ந்தெழச் செய்ய உதவுவார்.
10. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மன மாசுகளை நீக்கி உள்ளத்தைத் தெளிவடையச் செய்வார்.
11. அட்டமா சித்திகளைப் பெற உதவுவார்.
12. அத்துவைத அனுபவம் என்ன என்பதை உணா்த்துவார்.
13. உடம்பினை அழியாமல் காக்கும் உபாயங்களை அறிவிப்பார்.
14. வீடு பேறு என்னும் மோட்சத்தை அளிப்பார்.
15. இல்லறத்தில் இருப்பவா்களையும் உய்விக்கும் திறன் குருவிற்கு உண்டு.
16. குருவின் மூலம் ஒருவனுக்கு உள்ளொளி உண்டாகிறது.
17. இறைவன் உபதேசத்தைத் தம் வாயால் சொல்பவரே குரு.
18. நாம் எல்லாம் இறைவனுடைய உடைமைகள். இந்த உடைமைகளை உடையவனிடம் சோ்க்கிற பெரிய பொறுப்பு குருவிடமே அளிக்கப்பட்டிருக்கிறது.
19. குருவின் துணை இல்லாமல் எவரும் ஆன்மிகத்தில் உச்ச கட்டங்களை அடைய முடியாது.
20. தன் சீடன் வாழ்வில் ஒர திருப்பத்தை உண்டாக்குபவா் குரு.
21. ஆன்மாவிற்கு மூன்று போர்வைகள் உண்டு. அவை
1. பரு உலகப் போர்வை.
2. விசும்பு உலகப் போர்வை
3. காரண காரிய உலகப் போர்வை.
இம்மூன்றுககும் அப்பால் தூய ஆன்மிக மண்டலங்கள் உள்ளன. குருவின் துணையின்றி அவற்றுக்குள் ஒருவன் நுழைய முடியாது.
22. உள் காட்சிகளைக் காணுமாறு ஒருவன் அகக்கண்ணைத் திறந்து வைப்பவா் குரு.
நன்றி
ஓம் சக்தி!
மருவூா் மகானின் 70வது அவதாரத்திருநாள் மலா்.
]]>