நான் எங்கள் ஊர் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வருவதற்கு முன்பு எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. இப்பொழுது பரம்பொருள் பஙகாருஅம்மா அவர்களின்அருளால் நன்றாக இருக்கிறோம்.மலைபோல் வந்த துன்பங்கள் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருளால் பனிபோல் மறைந்து விட்டன.
எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நிலை மிகவும் மோசமான நிலை அடையும்போது, அம்மாவின் மூலமந்திரம் சொல்லி அவர்க்ளுக்குக் குங்குமம் கொடுப்பேன். சில மணி நேரத்தில் அவர்கள் உடல்நிலை சரியாகிவிடும்.
என் மகன் மணிகண்டன் ஏழு வயது இருக்கும்போது முதன் முதல் என்னுடன் இருமுடி போட்டு வந்தான்.
அன்று பரம்பொருள்அம்மா அவர்களை தரிசித்துவிட்டு, உணவருந்த உணவுக்கூடத்துக்கு வந்தோம். அங்கே ஒரு கிலோமீட்டர் தூரம் வரை உண்பதற்காக வரிசையில் நின்றபடிக் காத்திருந்தார். அவ்வளவு கூட்டம்.
என்னுடன் வந்தவா்கள், இவ்வளவு கூட்டத்தில் நாம் எப்படி உள்ளே செல்வது? எப்போது சாப்பிடுவது, எவ்வளவு நேரம் பசியோடு பொறுத்திருப்பது? நாங்கள் ஓட்டலுக்குப் போகிறோம். வருபவா்கள் வாருங்கள் என்று கூறிச் சென்றனா்.
அது வெறும் சாப்பாடு அல்ல. அது பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின்பிரசாதம் என்பது என் கருத்து. எனவே நான் அவா்களோடு செல்லாமல் என் மகனோடு தனியே இருந்தேன்.
அம்மா என் மகன் முதல் தடவையாக வந்திருக்கிறான். அவனும் நானும் உன் சாப்பாட்டைச் சாப்பிட தயவு காட்டு என மானசீகமாக வேண்டிக் கொண்டு ஓா் ஓரமாக நின்றிருந்தோம்.
அரைமணி நேரம் நின்று பார்ப்பேன். கருணை இருந்தால் எங்கள் இருவருக்கும் வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கட்டும். நாங்கள் ஓட்டலுக்கும் போகமாட்டோம். வேறு எங்கும் போய்ச்சாப்பிடப் போவதில்லை. உன் விருப்பம்போல் செய் என்று மானசீகமாக வேண்டிக் கொண்டேன்.
அப்போது……… என் மகன், அம்மா…….. அங்கே பாரும்மா யாரோ ஒரு அம்மா நம்மளக் கூப்பிடறாங்க என்றான்.
பார்த்தபோது யாரே ஒரு அம்மா………….. வாங்க இப்படி என்று இருகை
கூப்பி அழைத்துச் சென்றார். நாங்கள் அவரோடு செல்லும்போது யாரும் எங்களைத் தடுத்து நிறுத்தாதது ஆச்சரியம்.
எங்கள் இருவரையும் அழைத்துச் சென்ற அந்தப் பெண்மணி, நீயும் உன் மகனும் வயிறு நிறையச் சாப்பிட்டுப் போங்கள் எனச் சொல்லி உணவுக் கூடத்துக்கள் அழைத்துச் சென்றார்.
அங்கே எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்என்னடா இது எங்கும் இடமே இல்லை என்று தேடும்போது, எங்களை அழைத்துச் சென்ற அந்தப் பெண்மணி என் மகன் கையைப் பிடித்து ஒரு டேபிள் அருகே அழைத்துச் சென்றார்.
அங்கு இரண்டு இலைபோட்டு சாப்பாடு பரிமாறி இருந்தது. பக்கத்தில் சாப்பாட்டுக் கூடை, குழம்பு, ரசம், மோர், தண்ணீர் என்ற சகலமும் அருகில் இருந்தன. நீங்கள் யாரையும் கூப்பிடாமல் உங்களுக்கு வேணும்ங்கற வரையும் திருப்தியா சாப்பிட்டுப் போங்க! என்று கூறி என் மகனை அணைத்துத் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அவர்செல்லும்போது, திரும்பிப் பார்த்தபோது, போகப்போக அப்படியே மறைந்து விட்டார். என் இதயக் கருவயயில் இருக்கும் என் தாய் பங்காரு காமாட்சியே……… அவளே! தன் கையால் பரிமாறிச் சென்றுள்ளாள் என்று நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டேன். ஆனந்தக் கூத்தாடினேன். இந்த நிகழ்ச்சியை நானும் என் மகனும் என்றென்றும் மறக்க மாட்டோம்.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. திருமதி. கற்பகம், சாமக்குளம்
மருவூர்மகானின் 68வது அவதாரத்திருநாள் மலர்.