காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர் சக்தி திருமதி மும்தாஜ் பாலகிருஷ்ணன். கணவர் சக்தி பாலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டு வந்தார். இருவரும் வெவ்வேறு மதத்தவர். கலப்பு மணம் கொண்டவர்கள்.
1974 ஆம் ஆண்டு வரை இவர்கள் வாழ்க்கைச் சக்கரம் சுமுகமாகச் சுழன்று வந்தது. திருமதி மும்தாஜ் அவர்களுக்குத் திடீரென கால்களில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுப் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார். கால் வலிக்கு மருந்து, மாத்திரை, ஊசி எதுவும் பயன்தரவில்லை வேலூர் சி.எம். சி. மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்து ஒரு நாள் பரிசோதனைக்கு ரூபாய் 5000 செலவிடும் வேதனை தான் மிஞ்சியது.
இனி நாம் வாழ்வு படுத்த படுக்கையிலேயே கழிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுமோ என்று அச்சப்பட்டார்.
இந்த நிலையில் தான் அவர் உணர்வு ஆன்மித்தின் பக்கம் திரும்பியது. காஞ்சி காமாட்சி, கந்தகோட்டத்து முருகன், மாங்காடு காமாட்சி, திருவேற்காடு கருமாரி, முருகனின் அறுபடை வீடு என்றேல்லாம் சுற்றி வந்தார்.
ஆயினும், உடல் நோய்க்கான நிவாரணம் கிடைக்கவில்லை. ஆலயப்புலவர் திரு மு. சுந்தரேசன் அவர்கள் மூலம் மேல்மருவத்தூர் அன்னையப் பற்றிக் கேள்விப்பட்டு கணவரோடு மேல்மருவத்தூர் வந்தார். அன்னை ஆதிபராசக்தி யிடம் அருள்வாக்கு கேட்டார். முதன்முதல் கேட்ட அருள்வாக்கு அது! அது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! ஆம்!
பிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம் என்று தொடங்கி ஐந்து நிமிடங்கள் அரபிக் மொழியில் அட்சர சுத்தமாக ஓதி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டாள் அன்னை ஆதிபராசக்தி. பின்னர் தொடர்ந்து சுந்தரத் தமிழில் அடைமழையாகப் பொழிந்தாள்.
“மகளே நீ இந்து மதத்திற்கு அப்பாற்பட்டவள். மகன் இந்து மதத்தை சேர்ந்தவன். உங்களிருவரையும் இவ்வாழ்க்கையில் இனைத்து வைத்தே நான்தான்! இதன்மூலம் எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன்”என்றாள் அன்னை ஆதிபராசக்தி.
“மகளே! நீ இதுகாறும் காமாட்சியைச் சுற்றி வந்தாய். சென்ற மாதம் என்னை திருவேற்காட்டில் தரிசித்தாய் போன வாரம் மாங்காட்டில் வழிபட்டாய் இன்று தான் என்னைக் காண இங்கு வந்துள்ளாய்.
உனக்கு காலில் ஏற்படுள்ள உபாதையால், மருத்துவம் பலனளிக்காமல் போனதால் என்னைக் காண இங்கு வந்துள்ளாய். நான் உன்னை காப்பாற்றுகிறேன்.
“மகளே உன் கால் வலிக்கு ஒரு மருந்து சொல்கிறேன். முருங்கைப்பட்டை,சுக்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளைக்கடுகு,
கேழ்வரகு மாவு இவற்றை கொஞ்சம் எடுத்து அம்மியில் வைத்து கெட்டியாக அறைந்து வலியுள்ள முழங்கால் மூட்டுகளின் மேலே தடவி ஒரு மணிநேரம் ஊறவிடு! அந்த முருங்கைப்பட்டைச் சாற்றுக்கு மூட்டுகளின் இடையில் சென்று தேய்மானத்தைச் சரிசெய்யும் சக்தி உண்டு. அது அங்கே போய்த் தன் வேலையைச் செய்யும். பின்னர் அரிசி களைந்த கழுநீரைச் சற்றே சுடவைத்து முழங்கால் மூட்டுகளின் மேல் ஊற்றிக் கழுவிவிடு!
இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய் உன் மூட்டு வலி போய்விடும். பின்னர் என்னை வந்து பார்! உத்தரவு”என்க்கூறி அனுப்பி வைத்தாள்.
ஒரு மாதம் அன்னை ஆதிபராசக்தி சொல்லியபடி மருந்து தயாரித்துத் தடவினேன். குணமடைந்தேன்.
பக்கம்:301 -302.
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம். தல வரலாறு பாகம்-1.