உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா

0
1213
தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை…
என் பெரிய பையன் நான் இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்வான். இதோ இருக்கிறானே இவன் சின்னவன். எப்போதும் இவன் அம்மா பக்கத்திலேயே இருக்க வேண்டும். தூங்கும் போதும் என்னை விட்டுப் பிரிய மாட்டான். இவனையும் வைத்துக் கொண்டு அந்த அலுவலுக்குப் போக முடியாது. நானும் உன் கூடவே வரணும் என்று அடம் பிடிப்பான்
இவனை எப்படி ஏமாற்றிவிட்டு நான் தனியாகக் கிளம்புவது? இரவு வேளை தூங்குகிற நேரத்தில் அம்மா இல்லை என்றால் ஆர்ப்பாட்டம்பண்ணுவானே…
என்ன செய்வது? எப்படி அந்த ஊருக்குச் செல்வது எனத் தவித்தேன்.
என் எதிரே சுவரில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் படம்!
அம்மா! எப்படியாவது பார்த்துக்கொள்! தூங்க வைத்துவிடு! என்று எதார்த்தமாகத்தான் சொல்லிவிட்டு அவன் பக்கத்து வீட்டுக்கு போயிருந்தபோது, இதுதான் சமயம் என்று அவனை ஏமாற்றிவிட்டு புறப்பட்டு விட்டேன்.
இரவு அந்த வேலை முடிந்து மறுநாள் காலையே வீடு வந்து சேர்ந்தேன்.
என்னடா ! சாப்பிட்டு விட்டு ஒழுங்காகத் தூங்கினாயா..?இல்லே…அப்பாகிட்ட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாயா…? என்று கேட்டேன்.
அம்மா! நீதான் என்னை ஏமாத்திட்டுப் போயிட்டே…ஒழுங்காகத்தான் தூங்கினேன். சிறிது நேரம் கழித்து தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தேன்.
என் தலை மாட்டில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தாங்க! எனக்கு அதிசியமா இருந்துச்சு.
தூங்குடா! தூங்கு! உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுட்டுப் போயிட்டா! நீ தூங்கு! எனச் சொல்லி முதுகில் தட்டிக் கொண்டே இருந்தாங்களா….அப்படியே நானும் தூங்கிட்டேன் என்றான்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் படத்தைப் பார்த்து மனம் உருகியோ அழுத்தம் கொடுத்தோகூட நான் வேண்டிக்கலே….ஏதோ ஒரு உரிமையோடுதான் சொல்லிட்டுப் புறப்பட்டேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் படத்துக்கு முன் சாதாரணகத்தான் சொன்னேன் சக்தி! அன்று இரவே என் மகனைப் பார்த்துக்க வந்துவிட்டாளே…
என்று கண்ணீர் மல்கச் சொன்னார்.
அது என்ன சாதாரண படமா?
சக்திஒளி நவம்பர் 2012.