மகனே! பலர் என்னை இந்துக் கடவுளாகக் கருதுகின்றனர். நான் அப்படி அல்ல! நான் மதத்திற்கு அப்பாற்பட்டவள்! நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவள் அல்ல! அதற்கும் மேலே! நான் அனைத்து மதங்களுக்கும் உரியவள்! மதங்களைக் கடந்தவள்!
என்னைக் குறிப்பிட்ட மதக்கடவுளாக நினைத்து வழிபடுகின்றீர்கள். அது உங்கள் மனச் சாந்திக்காக! மதங்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை! நான் சமயம், என்ற சிறிய வட்டம் அல்ல! நான் பெரிய வட்டம்! அந்த வட்டத்தையும் கடந்தவள்.
ஒவ்வொருவரும் மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கின்றனர். மதச்சண்டைகளுக்கு அப்பார்பட்டவள் நான்! ஒரு மதத்திலிருந்து மற்றொறு மதத்திற்கு மதம் மாறுவது தேவையில்லை! எந்த மதத்திலிருந்தாலும் பூரண அருள் உண்டு! நான் அருளிய வழிபாட்டு முறைகள் யாவும் மதச் சார்புடையன அல்ல! மதங்களைக் கடந்தவை! உலக மக்களுக்குப் பொதுவானவை.
சில நேரங்களில் நான் பேரொளியாக, ஜோதியாகக் காட்சியளிக்கிறேன். அந்த ஜோதியையும் கடந்த நிலை என்னுடைய நிலை!
எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் என்னை வழிபடலாம், சரணாகதி அடையலாம்.மதங்களின் பெயரால் சண்டையிட்டு ரத்தம் சிந்துவது மக்களின் அறியாமை ஆகும். மதங்களின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதச் செயல்கள் மனிதனின் மனவளர்ச்சியின்மையைக் காட்டுகிறது.
நான் இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானவள். நான் அவதாரம் செய்திருக்கிறேன். அவதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய சொல் அல்ல.
உலகைக் காத்து இரட்சிக்க வந்த கடவுள் என்பது அவதாரம் என்ற சொல்லின் பொருள்.
பாலகன் உலகைக் காத்து இரட்சிக்க வந்த அவதாரம். எனக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழிபடுகின்றனர். நான் அனைத்து நாமங்களையும் கடந்தவள்! குணங்களுடன் காணப்படும் நான் குணங்குறி அற்றவள்!
நான் குறிப்பிட்ட மதத்திற்கு உரிய கடவுள் அல்ல! அல்ல! அல்ல!
மதங்களைக் கடந்தவள்! கடந்தவள்! கடந்தவள்.
அடிகளார் ஒரு மதகுரு அல்ல! அவர் மனித குல வழிகாட்டி!
சமயங்கள்தான் மதகுருக்களைப் போற்றுகின்றன. உலக சமயங்கள் ஒவ்வொன்றிலும் மத குருமார்கள் உள்ளனர்.அடிகளார் மதங்களைக் கடந்த, மனித நேயமிக்கத் தலைவர். சமயங்கள் அனைத்தையும் ஏகதிருஷ்டியாகச் சமநோக்குடன் நோக்குபவர்தான் அடிகளார். மதங்களின் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் இன்னபிற யாவும் அடிகளாரை பாதிப்பன அல்ல.
உலக மதத்தலைவர்களெல்லாம் அடிகளாரைப் போற்றி வழிபடும் நாள் வெகு விரைவில் வரப்போகிறது! உலகம் உய்ய ஒரே வழி அடிகளார் வழிதான்! என்று உலக மக்கள் உணர்ந்து வருகிறார்கள்! அமைதிப் புரட்சி, உலகப் புரட்சியாக மலரும் நாள் விரைவில் வரப்போகிறது.
(தொடரும்)
அன்னை ஆதிபராசக்தி சக்தி.பேராசிரியர் கண்ணன் M.A.,PH.D அவர்களுக்கு கனவில் வந்து கூறியவை…
ஆதாரம்
பக்கம் – 1- 4.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யார்?