“மகனே! வாத்தினை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? வாத்தினை மேய்ப்பவன் சாக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்த வாத்தினைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவான். அவ்வாறு வாத்தின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துச் செல்வதைப் பார்ப்பவா்களுக்கு மிகவும் வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கும். அவன் அந்த வாத்தினைக் குளத்தில் சென்று விட்டுவிடுவான். அது அங்கு அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும்.
அதுபோல சில சமயங்களில் உன்னை நான் கழுத்துப் பிடியில் வைத்திருப்பேன். மிக இக்கட்டான துன்பப்பிடி போல இருக்கும்.
அது மற்றவா்கள் பார்வையில் நீ துன்பப்படுவது போலவும், என்னை வழிபட்டதால்தான் நான்தான் அப்படிப் பிடித்திருக்கிறேன் எனவும், மிக ஏளனமாகவும் மற்றவா்களின் பார்வைக்குப்படும்.
நான் உன்னை மனித சாக்கடையிலிருந்து பிடித்து இழுத்து என்னுடைய அருள் தடாகத்தில் விட்டு விடுவதற்காகத் தான் பிடித்துச் செல்கிறேன்.”
-அன்னையின் அருள்வாக்கு-