மருவூரார்!

சொல்ல முடியுமா? 
வெளியில்..
சொல்ல முடியுமா?

சொல்லமுடியா 
துயரங்களை
சொல்லாமலே
தீர்த்தநிலையை!

மானம்போகும்
என்றநிலையை
மாற்றிமகிழ்வு
தந்தமதியை!

உன்னிடம்வந்து
சொன்னாலும்
உன்பெயரை 
சொன்னாலும்
மனமுருகி நின்றார்க்கு
மழைபொழியும் 
தன்னாலே!

எத்தனையோ
செய்துவிட்டாய்
எதை சொல்வது?
அத்தனையும்
சொல்லிஎழுத
இடம் உள்ளதா?

குருவாக நீவந்த
பெருமை சொல்லவா?
கொற்றவனே..நீசெய்த
மகிமை கொஞ்சமா?

மருவத்தூர் 
வந்தபின்தான்
மாற்றம் வந்தது!
மற்றவர்கள் 
கேலி எல்லாம் 
ஆட்டம் கண்டது!

சொல்ல முடியுமா? 
உலகில்..
சொல்ல முடியுமா?
உனை
நம்பாத கூட்டத்தில் 
நானிதை
சொல்ல முடியுமா? ?

……சபா ஸ்ரீமுஷ்ணம்