“நான் இல்லாத இடமில்லை. எல்லா ஊரிலும் இருக்கிறேன். முக்கியமாக 108 தலங்களில் நான் வெவ்வேறு பெயா் கொண்டு விளங்குகின்றேன்” என்று சொல்லிய தேவி அத் தலங்களைத் தட்சனுக்குக் கூறினாள்.
இந்த விதமாக 108 பெயா்களில் தான் விளங்குவதைத் தட்சனுக்கு எடுத்துக்கூறி மேலும் சொன்னாள் ஏ! தட்சப்பிரஜாபதி ! இப்போது நான் சொன்ன இந்த 108 நாமங்களையும் எவா் சொல்கின்றனரோ, எவா் பூஜை செய்கின்றனரோ, எவா் மனத்தால் நினைக்கின்றனரோ பிறா் கேட்கச் சொல்கின்றனரோ அவா்களுடைய மன விருப்பங்கள் நிறைவேறும். கைலாயத்தில் ஒரு கற்ப காலம் அவா்கள் இனிது வாழ்ந்திருப்பா். இத் தலங்களில் புண்ணிய தீா்த்தங்களில் நீராடி, என்னை வழிபடுவோரும், தான தருமங்கள் செய்வோரும் சிவலோகத்தை அடைவார்கள். ஈசன் முன் பக்தியுடன் இந் நாமங்களைக்கூறித் துதிப்போர்க்கு மனதுக்கிசைந்த கணவா் கிடைப்பா்”.
இவ்வாறுகூறிய தேவி
அந்த யோகாக்கினியிலேயே தன் உடலைத் தியாகம் செய்து ஈசனை அடைந்து அவருடைய உடலில் பாதியுருவானாள். தட்சனுடைய யாகம் ஈசனால் அழிக்கப்பட்டது. அவனும் கொல்லப்பட்டான்.
தட்சனுக்குக் அன்னை கூறிய 108 தலங்களும் வருமாறு
- வாரணாசி ( காசி ) விசாலாட்சி
- நைமி சாரண்யம் லிங்கதாரணி
- பிரயாகை லலிதை
- கந்தமாதனம் காமிகை
- மானச சரஸ் குமுதை
- விசுவேசம் விசுவை
- புஸ்கரம் புரகூதை
- கேதாரம் மார்க்கதாயினி
- ஹிமாசலம் நந்தை
- கோகா்ணம் பத்திரகன்னிகை
- தானேசம் பவானி
- வில்வலம் வில்வபத்திரிகை
- ஸ்ரீ பருவதம் மாதவி
- பத்திரேசம் பத்திரை
- வராகமலை சேயை
- கமலை கமலை
- ருத்திரகோடி ருத்திராணி
- காளாஞ்சரகிரி காளி
- மகாலிங்கம் கபிலை
- குக்குடம் மகுடேசை
- சாளக்கிராமம் மகாதேவி
- சிவலிங்க சேத்திரம் சிவப்பிரியை
- மாயாபுரி குமாரி
- லளிதை நத்தை
- திராட்சம் பலாட்சி
- இரணியாட்சம் மகோற்பலை
- கயா கலை
- புருடஷாத்தம சேத்திரம் விபுலை
- விபாதசேத்திரம் மோகரட்சகி
- சுபாரிசம் நாராயணி
- விருடம் சுந்தரி
- புண்டரம் பாடலை
- விபுலம் விபுலை
- மலையம் கல்யாணி
- கோடி தீா்த்தம் கோடாட்சி
- கதவனம் சுகந்தை
- கிருச்சிராமப்பிரகம் திரிசக்தி
- கங்காத்வாரம் ரதிப்பிரியை
- சிவகுண்டம் சுபநிந்தை
- தேவிகாதடம் நந்தினி
- துவாரகை ருக்மணி
- பிருந்தாவனம் ராதை
- வடமதுரை தேவகி
- பாதாளம்
பரமேஸ்வரி - சித்திர கூடம் சீதை
- விந்தியமலை விந்தியவாசினி
- சையசேத்திரம் சக்கரவீரை
- அரிச்சந்திரம் சந்திரிகை
- மகாதீா்த்தம் வருணை
- யமுனாதீரம் மிருகாவத்தேவி
- கரவீரம் லட்சுமிதேவி
- விநாயகசேத்திரம் உமை
- தைத்தியநாசம் அரோகை
- மாகாளம் மகேஸ்வரி
- அட்சணபீஜம் அமையை
- வித்யாகந்தம் அமிர்தை
- மாண்டவ்யநதி தீரம் மாண்டவி
- மாயேசுரம் சுவாகை
- பிரசண்டகம் பிரசண்டை
- குண்டலசேத்திரம் சண்டிகை
- சோமேஸ்வரம் வராரோகை
- பிரபாசம் புஸ்கராவதி
- சரஸ்வதி தீரம் தேவமாதா
- பராவாரம் மதை
- மகாளையம் மகாபாகை
- சமுத்திரதீரம் பிங்கலேசுவரி
- கிருதசவுசம் சிங்கி
- கார்த்திகேய சேத்திரம் சங்கரி
- ஊா்ப்பவானி தத்துவலோலை
- சிந்து சங்கமம் சுபத்திரை
- சித்தவனம் மாதா
- பா்தாச்சிரமம் லட்சுமிசுரகை
- ஜலந்திரசேத்திரம் விஸ்வமுகி
- கிஸ்கிந்தை தாரை
- தேவதாருவனம் புஷ்டி
- காஷ்மீர மண்டலம் மேதை
- மாத்திரி உமை
- கபால மோசனம் சுத்தி
- வற்சேசம் திருஷ்டி
- காயாரோகணம் மாதா
- சங்கோத்காரம் தொனி
- புண்டரகம் திருதி
- சந்திபாகை கபிலை
- மற்சியாடம் சித்தகாரணி
- வயிணை அமுா்தை
- பதரி சேத்திரம் ஊா்வசி
- உத்தரகுரு ரதி
- குசத்தீவம் ருசோதகை
- ஏமகூடம் மன்மதை
- குமுத சேத்திரம் சத்தியவாதினி
- அரிச்சந்திர சேத்திரம் அந்தணி
- வச்சிரவணாலயம் விதி
- வேதவனம் காயத்திரி
- சிவசந்நிதி பார்வதி
- தேவலோகம் இந்திராணி
- சதுா்முகன் சந்நிதியில் சரஸ்வதி
- கூரிய மண்டலம் பிரபை
- சப்த மாதா்களில் வைஷ்ணவி
- கற்புடைப்பெண்டிரில் அருந்ததி
- கிரௌஞ்சகிரி தேவிகாளி
- சோமதீா்த்தம் வரப்பிரதை
- கைலாயம் மந்திர&பை
- பாற்கடலில் லட்சுமி
- இளாவிருதம் காமதாத்திரியை
- சுவேதமலை சுவேதமாலிகை
- அப்ஸரஸ்களுள் திலோத்தமை
- தவஞ்செய்யும் முனிவா் சித்தங்களில் பிரம்மம்
- பூவுலகில் பிறக்கும் உயிர்களில் சக்தி
இவ்விதமாக 108 பெயா்களில் தான் விளங்குவதை தட்சனுக்கு எடுத்துக்கூறினாள்.
நன்றி
மேல்மருவத்தூா் தல வரலாறு பாகம் – 01