புஞ்சை புளியம்பட்டியில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கும்பாபிடேகம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த நேரம் அது*
*அற்புதமான அந்த வேள்வியும் சக்கரங்களும் கலச விளக்குப் பூசையும் ஒடியாடி உழைக்கிற செவ்வாடைத் தொண்டர்களும் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது*
*அந்த வேள்வியில் இந்தக் காட்சியெல்லாம் பார்த்துப் பிரமித்தபடி இருந்தார் ஒரு பக்தர்.அவருக்கு அன்னையிடம் பக்தியும் இருந்தது, குடிப்பழக்கமும் எனும் கெட்டப் பழக்கமும் இருந்தது. அதனால் ஒரு தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்ச்சியும் அந்த வேளையில் தலை தூக்கின.*
*அந்த சக்தி பீடத்தின் முன்னால் ஒரு புற்று உண்டு.ஏதொவொரு உந்துதல் காரணமாக அந்தப்புற்றின் அருகே சென்றார்.*
*தாயே! உன்மீது ஆனை! இனிமேல் நான் சத்தியமாகக் குடிக்கமாட்டேன் எனப் புற்றின் அருகில் நின்றவாறு சபதம் எடுத்துக் கொண்டார். அது மட்டுமா? அந்தக் கும்பாபிடேக விழா நடக்கும் நாள் முழுதும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.*
*பின் ஊர் திரும்பினார். ஒரு நாள்! இரண்டு நாள் மன உறுதியோடு குடிக்காமல் இருந்தார். சபலம் அவரை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது மன உறுதி தளர்ந்தது புற்றுக்கு அருகே எடுத்துக்கொண்ட அந்த சபதத்தைச் சபலம் வெற்றிபெற்றது, போனால் போகிறது என்று குடிக்கத்தொடங்கினார்.*
*யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், புற்றை சாட்சியாக வைத்து கொண்டு இவராகத் தானே சபதம் எடுத்தார்? இப்போது மீறலாமா? மீண்டும் குடிக்கத் தொடங்கி விட்ட அவருக்கு அன்னை சரியான பாடம் புகட்டினாள்.எப்படித் தெரியுமா? அது தான் வேடிக்கை! அன்னை நடத்திய திருவிளையாடல்களில் மிகப் புதுமையான விளையாட்டு அது. அவர் எங்கே சென்றாலும், எங்கே உறங்க முயன்றாலும் காதுல ஒரு பாட்டு சப்தத்தோடு அதிக இரைச்சலோடு ஒலிக்க ஆராம்பித்தது “புற்றில் இருக்கும் பாம்பு சத்தியமாய் அதை நம்பு” என்று அந்தப்பாட்டு முதல் வரி மட்டும் ஒலிப்பெருக்கியில் அலறுவது போல அவர் காதுகளில் அடிக்கடி பேரிரைச்சலோடு ஒலிக்க ஆரம்பித்தது.*
*தன் தவறை உணர்ந்த அந்தத் தொண்டர் மீண்டும் புளியம்பட்டி சக்திபீடத்தின் புற்றுக்கு அருகே சென்று”தாயே! ஏதோவொறு சபலத்தினால் மீண்டும் குடித்துவிட்டேன். இனி கட்டாயம் குடிக்கமாட்டேன். உன் மேல் ஆணை!” எனக் கூறி மன்னிப்புக் கோறிய அதன் பிறகே அந்த ச் சப்தம் கேட்பது நின்றது குடிப்பழக்கத்தை அறவே கைவிட்டார்.*